"ஏய்.. ஏன்யா கத்துறீங்க” டென்ஷனான திருமா.. மிரண்டு போன தொண்டர்கள்...!
மதுரை மேலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களிடையே கோபப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற நெல்லை மண்டல மதிமுக செயற்குழு கூட்டத்தில் வைகோ செய்தியாளர்களையும், தொண்டர்களயும் ஆவேசமாக பேசியது சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையானது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினார். அவரது உரையைக் கேட்காமல் கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.
அப்போது தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தி சேகரித்த செய்தியாளர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியேற்ற உத்தரவிட்டார். மேடையில் பேசிக்கொண்டிருந்த வைகோ செய்தியாளர்களை நோக்கி, “காலி சேரையா எடுத்துக்கிட்டு இருக்க என கேள்வி எழுப்பியதோடு, தொண்டர்களையும் பார்த்து எங்கடா எழுந்து போறீங்க என ஒருமையில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டிக்காக தயாராகிக்கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் இருந்த தொண்டர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் திருமாவளவன் பேட்டியளிக்க முடியாமல் திண்டாடினார். அதை பார்த்தும் தொண்டர்கள் அமைதியாகாமல் கத்திக்கொண்டே இருந்ததால், கடுப்பான திருமாவளவன் “ஏன்யா இப்படி கத்துறீங்க?” என கர்ஜிக்கும் தோரணையில் மிரட்டினார்.
இதையும் படிங்க: மாங்காய் லோடு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து கோர விபத்து... 8 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி...!
உடனே அவரது தொண்டர்கள் கப்சிப் என அமைதியானதோடு திருமாவளவனும் பேட்டியைத் தொடர முடிந்தது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்படி தொண்டர்களிடம் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கோவத்தை வெளிக்காட்டி வரும் வீடியோக்களை எதிர்க்கட்சியினர் சோசியல் மீடியாக்களில் தாறுமாறு வைரலாக்கி ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா"... 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் கோலாகலம்...!