×
 

முதல்வர் விஜய்க்கு அதிகாரம் இருக்கு! எந்த பாதிப்பும் வராதுனு சொல்லிருக்காங்க! திருமாவளவன் சப்போர்ட்!

தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்று விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த நியமனம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலர் சாய்குமார் கடந்த ஜூன் 26-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இந்த நியமனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாக குறிப்பிட்டார். முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பதால்தான் கே. வெங்கட நாராயணாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

மேலும், டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி என்பது அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் நிர்வாக அதிகாரம் கொண்ட பதவி அல்ல என்றும், முதல்வரின் நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அந்தப் பொறுப்பை வழங்குவதில் தவறு எதுவும் இல்லை என்ற கருத்தை அமைச்சர் வலியுறுத்தியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "இது அவர்கள் கட்சி தொடர்பான விவகாரம். அரசுப் பதவி என்றாலும் அந்த நியமனத்தை மேற்கொள்ளும் அதிகாரம் முதல்வருக்கு உள்ளது. இந்த நியமனத்தால் அரசின் நிர்வாகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்ற கருத்தையே அமைச்சர் முன்வைத்துள்ளார்" என்று கூறினார்.

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தைச் சுற்றி அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், திருமாவளவனின் இந்த கருத்து புதிய கவனத்தை பெற்றுள்ளது. இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் இந்த நியமனம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஆளுங்கட்சி தரப்பும் அதற்கான விளக்கங்களை தொடர்ந்து அளித்து வருகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்த சி.எம்... விஜய்க்கு நேரடி வார்னிங் கொடுத்த திருமாவளவன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share