×
 

எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

தி.மு.க., மூத்த நிர்வாகிகளே, கட்சி தலைமையிடம் வேலு மீது புகார் பட்டியல் வாசித்துள்ளனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொகுதியில் மூன்றாவது முறையாக சிட்டிங் எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் உள்ள தி.மு.க.வைச் சேர்ந்த வேலு மீது கட்சியினரே கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக உள்ளூர் மக்களிடமும், தி.மு.க. மூத்த நிர்வாகிகளிடமும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

வேலு 1984-ல் அதிமுக சார்பில் தண்டராம்பட்டு தொகுதியில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995-ல் தி.மு.க.வில் இணைந்த அவர், 2001, 2006-ல் தண்டராம்பட்டு தொகுதியிலும், 2011, 2016, 2021-ல் திருவண்ணாமலை தொகுதியிலும் வெற்றி பெற்று அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

ஆனால், சொந்த சமூகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, வன்னியர் உள்ளிட்ட பிற சமூக மக்களை அவர் புறக்கணித்துவிட்டதாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் புகார் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: நான் முதலமைச்சர் ஆகிட்டேன்னா!!! திமுக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! கொதித்துப்போன அறிவாலயம்!

அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய முடியாத நிலை, நகரில் தினசரி போக்குவரத்து நெரிசல், ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்வு, வெளியூர் பக்தர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியின்மை போன்ற அன்றாடப் பிரச்சினைகள் மக்களை வேலு மீது கோபப்பட வைத்துள்ளன.

மேல்மா சிப்காட் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது விவசாயிகளை 2023-ல் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு வேலுதான் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கட்சிக்காக நீண்ட காலமாக உழைக்கும் நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு, தன் மகன் கம்பனை வேட்பாளராக்க முயற்சிப்பதும் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நாயுடு மங்கலத்தில் அக்னி கலசத்தை அகற்றிய சம்பவம் வன்னியர் சமூக மக்களிடம் தீராத வடுவாகப் பதிந்துள்ளது. தற்போது அதிமுக-பாஜக-அமமுக-பாமக கூட்டணி உருவாகியுள்ளதால், வன்னியர் ஓட்டுகள் அதிமுக கூட்டணிக்கு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், பாஜகவுக்கு திருவண்ணாமலை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாமக தரப்போ, அக்னி கலசத்தை முன்னிலைப்படுத்தி வன்னியர் மக்களிடம் வேலுவுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

தி.மு.க. தலைமை வேலுவுக்கு ஆதரவாக இருந்தாலும், உள்ளூர் மக்களின் அதிருப்தி மற்றும் வன்னியர் சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வரும் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி பெரும் போட்டியை எதிர்நோக்கியுள்ளது.

இதையும் படிங்க: செந்தில்பாலாஜி Vs வேலுமணி!! கோவையில் மாஸ் காட்டப்போவது யார்? 10 தொதிகள் யார் வசம்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share