விஜய் கட்சிக்கு யாரும் தாவ வேண்டாம்! நிர்வாகிகளிடம் கெஞ்சும் திருமாவளவன்!! விசிக TO தவெக!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில், மாவட்டச் செயலர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்போரை, அக்கட்சித் தலைவர் திருமாவளவன் சமாதானப்படுத்தி வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் (விசிக) சமீபத்தில் நடத்தப்பட்ட மாவட்டச் செயலர் நியமனங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலர் நியமிக்கப்பட்ட நிலையில், சிலருக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை.
கட்சி தலைமை அறிவித்த விதிமுறைப்படி, மாவட்டச் செயலராக நியமிக்கப்படுபவர்கள் அந்தந்த தொகுதியில் வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், வேறு தொகுதிகளில் வாக்காளர்களாக இருப்பவர்களும் சில இடங்களில் மாவட்டச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த கட்சி நிர்வாகிகள் பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைய முயற்சிகளும் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: காங்கிரஸை விட நாங்க பெரிய கட்சி!! பார்த்து கவனியுங்க!! திமுகவுக்கு அழுத்தம் தரும் விசிக! திருமா ட்விஸ்ட்!
இந்நிலையில், கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும், கட்சியினரிடம் “நடிகர் விஜய் தொடங்கிய கட்சிக்கு யாரும் செல்ல வேண்டாம்” என்று திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் உள்ளரங்கக் கூட்டம் ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: “35 ஆண்டுகளாக உங்களுக்கு ‘அ’ போடச் சொல்லி அரசியல் கற்றுக் கொடுத்தவன் நான் தான். அம்பேத்கர் அரசியலை விட்டுவிட்டு, சினிமா பிரபலம் திடீரென கட்சி ஆரம்பித்துள்ளார். அவருடன் போக வேண்டாம்.
உங்களுக்கு இருக்கும் அரசியல் அனுபவம் விஜய்க்கு கிடையாது. அவர் இப்போது பால்வாடி படிக்கும் குழந்தை போன்றவர். உங்களை நான் பட்டப் படிப்பு படிக்க வைத்து, பிஎச்.டி. வரை கொண்டு சென்றுள்ளேன்.
இத்தனை ஆண்டு படித்த அம்பேத்கர் அரசியலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நீங்கள் போய் அங்கு அரசியல் கற்றுத் தரும் நிலைக்கு ஆளாக வேண்டாம்.
நம்முடைய கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தலைவர்களாக வளர்ந்துள்ளனர். இன்று டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது இங்கிருந்து சென்றவர்கள் தான்.”
நம்முடைய கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தலைவர்களாக வளர்ந்துள்ளனர். இன்று டிவி விவாதங்களில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது இங்கிருந்து சென்றவர்கள் தான்.”
தற்போது விசிக-தவெக இடையேயான அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த உள் பிளவை சமாளிக்க திருமாவளவன் மேற்கொள்ளும் முயற்சிகள் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: அயோதி ராமர் கோயிலை சுற்றி 15 கி.மீ-க்கு இதுக்கு தடை..!! வெளியானது அதிரடி உத்தரவு..!!