பாஜகவை ஒரு கை பார்ப்பேன்... கல்வி நிதி தராத மத்திய அரசை ஓங்கி அடிக்க ஆரம்பித்த திருவள்ளூர் எம்.பி...!
தமிழகத்திற்கு கல்வி நிதியை விடுவிக்காமல் இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் திருவள்ளுரில் உள்ள திஷா அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்,
மிகுந்த வேதனையுடனும் அதைவிட பலமடங்கு அதிகமான உறுதியுடனும் நான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறேன்.
மத்திய அரசு நமது தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) நிதி ரூபாய் 2,152 கோடியை நிறுத்தி வைத்துள்ளது, இதனால் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பெரும் கேள்வி கூறி ஆகியுள்ளது உள்ளது. நியாயமாக தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல்
புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, அதன் மூலம் மும்மொழி கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க நினைக்கும் ஒன்றிய அரசு இதில் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பதை மறந்துவிட்டது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு பகடைகாயாக நமது குழந்தைகளை பயன்படுத்துவது சரியல்ல.
பல மாதங்களாக, நான் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேசி வருகிறேன். தமிழகத்திற்கு SSA நிதியை உடனடியாக விடுவிக்கக் கோரி தனிநபர் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்தேன். இந்த விஷயத்தை பாராளுமன்றத்தில் விதி 377 இன் கீழ் மற்றும் பாராளுமன்ற பூஜ்ஜிய நேரத்திலும் எழுப்ப முயன்றேன். மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதானுக்கும் நேரடியாக கடிதம் எழுதி நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இந்திய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், மத்திய அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது, கல்வி மற்றும் மொழி உரிமைகள் குறித்த நமது மாநிலத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்காக தமிழ்நாட்டின் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களைத் பாஜக அரசு தொடர்ந்து தண்டிப்பது ஏற்புடையதல்ல.
இதையும் படிங்க: ட்ரம்ப் வைக்கும் அடுத்த ஆப்பு!! மாணவர்களுக்கு சிக்கல்!! அமெரிக்கா போறீங்களா உஷார்!!
இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக நிதியை நிறுத்தி வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய SSA நிதியை விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வேன். சுதந்திர காலத்தில் இருந்து அறவழி போராட்டத்தை முன்னெடுத்து போராடி சுதந்திரம் பெற்று தந்த காங்கிரஸ் பேரியக்கத்திற்கே உரிய அற வழியில் நான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம் அல்ல, அரசியல் வற்புறுத்தல் மற்றும் மொழி திணிப்பு இல்லாமல், கல்விக்கு சமமான உரிமையை பெற வேண்டிய தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கான போராட்டமாகும். தனிமனித உரிமைகளை பறிக்க நினைக்கும் பாஜக ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து இப்போது நாம் போராடவில்லை என்றால் நம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். மேலும் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் கல்வி முறையை பாஜகவின் அற்பத்தனமான அரசியல் காரணங்களுக்காக அழிக்க நினைப்பது நியாயமில்லை.
எனவே அனைத்து ஜனநாயக சக்திகள், சமூக நீதி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு மக்கள் இந்தப் போராட்டத்தில் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். கல்வி என்பது பேரம் பேசும் பொருள் அல்ல - இது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அரசியலமைப்பு உரிமை, மேலும் எந்த அரசாங்கமும் அரசியல் ஆதாயத்திற்காக இதை மறுக்க முடியாது.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.. கடுமையாக சாடிய அதிமுக..!!