23 பெண்களின் நிர்வாண விடியோ! திருவண்ணாமலை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! விசாரணையில் பகீர்!
23 பெண்களின் நிர்வாண வீடியோக்கள், ஜோடியாக தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோக்கள் இருந்ததை கண்டு, போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் தனிமையில் இருக்கும் காதலர்கள் மற்றும் கள்ளக்காதலர்களை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் மற்றும் நகைகளைப் பறிக்கும் கும்பல் ஒன்றை போலீசார் தகர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தனிமையாக ஒதுங்கும் ஜோடிகளை குறிவைத்து, அவர்களை இரவில் வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கள்ளக்காதலர்கள் என்பதால், வீட்டில் பயந்து போலீசில் புகார் அளிக்காமல் இருந்து வந்தனர்.
மே 31-ம் தேதி இரவு, 23 வயது இளம்பெண் ஒருவர் தன் காதலனுடன் தனிமையில் இருந்தபோது, ஒரு கும்பல் அவர்களை வீடியோ எடுத்து மிரட்டியது. இதைத் தொடர்ந்து அப்பெண் துணிந்து போலீசில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, நேற்று முன்தினம் 16 வயது சிறுவன் உள்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 13 பேர் 15 நாளில் 'சஸ்பெண்ட்'!! விஜய் பக்கா ஸ்கெட்ச்! களை எடுக்கும் பணியில் தவெக தீவிரம்
போன்களில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 23 பெண்களின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் தனிமையில் இருந்த ஜோடிகளின் பல வீடியோக்கள் அதில் இருந்தன.
இந்தக் கும்பல் இரவு நேரங்களில் பைக்கில் சுற்றி வந்து, ஒதுக்குப்புற பகுதிகளில் தனிமையில் இருப்பவர்களைக் கண்டால், சக நண்பர்களை வரவழைத்து கூட்டாக மிரட்டி பணம் பறிப்பது, பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுப்பது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தர்மபுரியைச் சேர்ந்த ஒரு பெண் மே 30-ம் தேதி தன் கள்ளக்காதலனுடன் கிரிவலம் வந்தபோது, பெரிய கோளாப்பாடி அருகே இந்தக் கும்பலிடம் சிக்கினார். அவர்களிடம் நகை மற்றும் பணத்தை இழந்த அப்பெண், மறுநாள் மொபைல் மூலம் மிரட்டி ஜிபே மூலம் 4,000 ரூபாய் பறிக்கப்பட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் புகார் அளித்தார். இந்த வழக்கிலும் கைதான கும்பலில் ஐந்து பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்களில் உள்ள பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எவ்வளவு பணம் மற்றும் நகை பறிக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி சரமாரி கேள்வி!