குடும்பத்தை காப்பாத்த பிஜேபிக்கு அடிமை ஆயிட்டாரு! இபிஎஸ்ஐ வெளுத்து வாங்கிய டிகேஎஸ்
தனது குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் அடிமையாகி விட்டார் என்று டி கே எஸ் இளங்கோவன் குற்றம் சாட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது என்றும் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல என்றார். 2026 இல் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என இபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வர வேண்டுமோ அப்போது வரும் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்வதாகவும் கூறினார். அமித்ஷா வீட்டு கதவை தட்டவில்லை என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்கு அப்போது பதில் அளித்தார். திமுகவினர் சென்று பிரதமர் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக மூலமாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய விரும்புவதாகவும் அவர்கள் கூட்டி பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஏனெனில் அவர்கள் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து இருப்பதாகவும் கூறினார்.
அதிமுக குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினரை பாதுகாக்க விரும்புவதாகவும் அதற்காக பாஜகவின் அடிமைகள் ஆகிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக மக்கள் அதிமு-பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ன திட்டவட்டமாக தெரிவித்த அவர், கருப்பு சிகப்பு தமிழகத்தில் உள்ளது. காவிக்கு இடமில்லை என்றார்.
1999இல் தாங்கள் பாஜகவில் இணைந்த போது அது ஒரு நிலையற்ற அரசாங்கமாக இருந்தது என்று தெரிவித்த அவர் மூன்று ஆண்டுகளுக்குள் மூன்று தேர்தல்கள் நடந்ததாகவும் குறிப்பிட்டார். இனிமேல் பாஜகவுடன் எந்த தொடர்பும் இருக்காது என்று ஜெயலலிதா திட்டவட்டமாக கூறிய போதிலும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் காலில் விழுந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கிட்னி முறைகேடு..! இதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? மா.சு.வுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!
இதையும் படிங்க: முதல்ல ஏமாத்துன பணத்தை கொடுங்க.. திமுகவுக்கு அண்ணாமலை சம்மட்டி அடி..!!