என்கிட்டேயே கேள்வி கேக்குறியா? ஆத்திரத்தில் நரிக்குறவர்களை தாக்கிய அதிமுக பிரமுகர்...
திருவண்ணாமலையில் நியாயம் கேட்க சென்ற நரிக்குறவர்களை அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அதிமுக பிரமுகர் கணேஷ் என்பவருக்கு சொந்தமான பால்வண்டி நரிக்குறவர் வியாபாரி சத்தியகுமார் என்பவர் மீது மோதியுள்ளது. சாலை விபத்தில் காயம் அடைந்த நரிக்குறவ வியாபாரி சத்தியகுமார் குடும்பத்தினர் விபத்தை ஏற்படுத்தியது குறித்து அதிமுக நிர்வாகி கணேஷிடம் நியாயம் கேட்க சென்றுள்ளனர்.
அப்போது, யாரிடம் வந்து கேள்வி கேட்கிறீர்கள் எனக் கூறி சத்தியகுமார் குடும்பத்தினர் மீது கணேஷ் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கணேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நரிக்குறவர்களை கணேஷ் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: விடாக்கண்டன் பாஜக... கொடாக்கண்டன் இ.பி.எஸ்... ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. முக்கிய முடிவு..?
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி 200 தொகுதிகளில் ஜெயிக்கும்.. அடித்துச் சொல்லும் அர்ஜூன் சம்பத்.!!