வெற்றி லேப்டாப் முதல் தங்க மோதிரம் வரை... முதல் பட்ஜெட்டில் அதிரடி மழை..! நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு..!!
2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்து உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மீதான உரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நிகழ்த்தினார். அப்போது ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் செய்த பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். குறுகிய காலத்தில் பல சாதனைகள் தமிழக வெற்றிக்கழக அரசால் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முதலமைச்சர் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் 5 ஓடுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். மதுபான உற்பத்தியாளர்களுக்காக கூடுதல் சிறப்பு கட்டணம் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் அன்பளிப்பாக ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பள்ளிகளில் தூய்மை சேவையை ஒருங்கிணைத்து மேற்கொள்ள சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
முதல் கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்த 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 3734 அரசு பள்ளிகளில் 2,132 கோடி ரூபாயில் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அரசு பள்ளிகளை நவீனமயமாக்க இந்த ஆண்டு மட்டும் 300 கோடி ஒதுக்கீடு என்று தெரிவித்துள்ளார். மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த 125 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பள்ளிப் பாடத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். போதை இல்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்ட தன்னார்வ குழுக்கள் அமைக்க 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?
பொது நூலகங்களில் டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். காமராஜர் சிறப்பு பள்ளிகள் திட்டத்தில் நவீன உண்டு உறைவிட பள்ளிகள் நிறுவ 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்துவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக கூறினார். வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!