கட்சி மீட்டிங்கில் கம்பி நீட்டும் காங்கிரசார்!! தீராத தலைவலியில் மேலிட பொறுப்பாளர்கள்! கிரேட் எஸ்கேப்!
தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட உள்ளதால், மேலிட பொறுப்பாளர்கள் நடத்தும், 'ஜூம் மீட்டிங்'குகளில், மாவட்ட தலைவர்கள் தலையை காட்டிவிட்டு, 'எஸ்கேப்' ஆகி விடுகின்றனர்.
சென்னை: காங்கிரஸ் கட்சியை அடிமட்டம் முதல் வலுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய 'சங்கதன் ஸ்ரீஜன் அபியான்' திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்படாத மாவட்ட தலைவர்களை மாற்றி புதியவர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. புதிய தலைவர்கள் பட்டியல் டெல்லி மேலிடத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஓட்டுச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்கள்) நியமனம் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான பட்டியலில் தமிழகத்தில் உள்ள 75,000 ஓட்டுச்சாவடிகளுக்கு காங்கிரஸ் சார்பில் வெறும் 27,000 முகவர்களே நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையும் படிங்க: தமிழக காங்., மாநில நிர்வாகிகள் அதிரடி மாற்றம்!! தலைமை பிறப்பித்த உத்தரவு!! மாறுது அரசியல் களம்
பாஜக மற்றும் தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் இருந்தாலும் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகள் கேட்கும் நிலையில் கட்சியின் அடிப்படைப் பணிகளில் கூட பலவீனம் இருக்கக் கூடாது என்பதால் கடந்த ஒரு வாரமாக காலை, மாலை, இரவு என ஜூம் மூலம் ஆன்லைன் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் முன்னாள் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் பல மாவட்ட தலைவர்கள் திட்டமிட்டே கூட்டங்களைப் புறக்கணித்து வருகின்றனர். பங்கேற்பவர்களில் சிலர் மீட்டிங் தொடங்கியதும் தலையைக் காட்டிவிட்டு உடனே வெளியேறி விடுகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் திமுக கூட்டணியில் ஆட்சிப் பங்கு கோரிக்கையை எப்படி ஏற்க முடியும் என மேலிட பொறுப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக காங்கிரசுக்குள் கூட்டணி விவகாரத்தில் குழப்பம் நீடிப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தவெக கூட்டணிக்கு ஓபிஎஸ், தினகரன் சம்மதம்!! தேர்தல் செலவுக்கு விஜயிடம் பணம் கறக்க திட்டம்! நீடிக்கும் இழுபறி!