×
 

கடந்த தேர்தலை விட விர்ர்ரென ஏறும் வாக்குப்பதிவு!! 2021-ல் இவ்வளவு தான்! இப்போ எகிறுது சதவீதம்!

கடந்த தேர்தலை விட அதிகமான மக்கள் ஓட்டளித்து வருவதால் அதிகமான ஓட்டுக்கள் பதிவாகும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துளளது.

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர். (சிறப்பு சுருக்க திருத்தப் பணி) முடிந்த பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தலில் மக்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 37.56 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது 2021 சட்டசபை தேர்தலின் அதே நேரத்தில் பதிவான 27.69 சதவீதத்தை விட கணிசமாக அதிகம். காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் ஓட்டுப்பதிவாகியிருந்தது. அப்போது 2021-ல் 13.80 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது.

எஸ்.ஐ.ஆர். மூலம் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் 14 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயரும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்த்தது. இப்போது காலை 11 மணி வரையிலான போக்கு, அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் முதல் 2 மணி நேரத்தில் 17.69% வாக்குப்பதிவு!! சட்டசபை தேர்தல் பரபர!! ஓட்டுப்பதிவு விறுவிறு!!

தேர்தல் ஆணையம் ‘100 சதவீத வாக்குப்பதிவு’ என்பதை இலக்காக வைத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல புதுமையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்லூரிகளில் வாக்காளர் எழுத்தறிவு கிளப்புகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலேயே வாக்குப்பதிவு ஏற்பாடு, வீடு வீடாக துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட முயற்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

காலை முதலே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. வெயில் அதிகமாக இருந்தாலும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக புதிய வாக்காளர்களின் பங்கேற்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் இலக்காக வைத்துள்ள 100 சதவீத வாக்குப்பதிவுக்கு இந்த ஆரம்பப் போக்கு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடரும் நிலையில், இறுதி சதவீதம் எவ்வளவு உயரும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இன்றைய அதிக வாக்குப்பதிவு சதவீதம், தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!! மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share