×
 

தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு!! தேர்தல் களத்தில் ரூ.3000 கோடியை புரளவிட்ட திமுக!!

இந்த தேர்தலில் தவெக விஜயின் வருகை, யாருடைய வெற்றி – தோல்விக்கு வழிவகுக்கும் என, யாராலும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. அனைத்து கட்சி வேட்பாளர்களும் இறுதிக் கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று வரம்பு விதித்துள்ளது. ஆனால் கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. தீவிரமாக போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு, ஒரு நாளைக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 65,000 முதல் 75,000 ரூபாய் வரை செலவாகிறது என வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் சராசரியாக 230 வாக்குச்சாவடிகள் உள்ளன. எனவே, ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 1.50 கோடி ரூபாய் இருந்தால்தான் களத்தில் நிற்க முடியும் என்று அவர்கள் புலம்புகின்றனர்.

இதையும் படிங்க: பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கட்சிகள்! கோடிகளில் கொட்டும் திமுக! சளைக்காத அதிமுக!

ஆளும் தி.மு.க. மட்டுமே தன் வேட்பாளர்களுக்கு அன்றாட தேர்தல் செலவுகளுக்கு உதவி செய்வதாக களத்தில் பேசப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால் இது சாத்தியமாகிறது. எதிர்க்கட்சியான அதிமுகவில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்ததால், வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி கிடைக்கவில்லை. பெரும்பாலான வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் அல்லது வசதி படைத்தவர்கள் என்பதால், கட்சித் தலைமை பணப் பட்டுவாடா செய்யவில்லை.

தவெக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தவெகவில் சிலர் நடிகர் விஜய்யை நம்பி தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்துள்ளனர். 

நாம் தமிழர் கட்சியில் ‘திரள் நிதி’ சேகரிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அது வேட்பாளர்களுக்கு இதுவரை பகிரப்படவில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக வேட்பாளர்கள் நிதி உதவி பற்றி கேள்விப்படவே இல்லை என்று தெரிவிக்கின்றனர். அவர்கள் தி.மு.க. தங்களை கரை சேர்க்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. நேரடியாகவோ அல்லது மாவட்ட செயலாளர்கள் மூலமோ உதவி செய்வதாக தகவல்கள் உள்ளன. தேமுதிகவுக்கு ஏற்கனவே செட்டில்மென்ட் முடிந்துவிட்டதால், பெரும்பாலான வேட்பாளர்கள் டம்மி போல களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள் பணம் திரட்ட பொதுவாக ஒப்பந்ததாரர்கள், தொழில் முதலாளிகள் மற்றும் பைனான்சியர்களை நாடுகின்றனர். ஆனால் ஆட்சி அதிகாரம் தி.மு.க. கையில் இருப்பதால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பெரும்பாலான பைனான்சியர்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு சாதகமாக உள்ளனர். அதிமுக மற்றும் தவெக வேட்பாளர்களுக்கு நிதி பெறுவது கடினமாகியுள்ளது.

தேர்தல் களத்தில் பணப் புரளல் அதிகரித்துள்ளதாகவும், தி.மு.க. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதாகவும் வேட்பாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் செலவுகளை கையாள்வதில் ஆளும் கட்சியின் நிலை வலுவாக இருப்பது, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.8,000 கூப்பனில் என்ன பொருள் வாங்கலாம்? எந்த கடையில் வாங்கலாம்?! மு.க.ஸ்டாலின் முன் பெண் உற்சாகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share