×
 

நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழக அரசின் சார்பில் ஐந்து நாள் தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீங்களும் தொழிலதிபராகலாம் என்ற தலைப்பில் ஐந்து நாட்கள் தொழில் மேம்பாட்டு பயிற்சியை தமிழக அரசு வழங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், "நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்" தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் 15.06.2026 முதல் 19.06.2026 தேதி வரை 5 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் & அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் & பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் ERP Tally, ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள், ஆகியவை பற்றி விளக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆண் / பெண் 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம் என்றும் இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..! பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல்வர் விஜய்..!

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் என்றும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share