×
 

அமைச்சர் நேரு ஊழல் வழக்கு!! சிக்கப்போகும் அதிகாரிகள்?! 6 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு திக்!! திக்!!

இந்த உத்தரவால், முறைகேடில் தொடர்புடைய அதிகாரிகள் பலருக்கு சிக்கல் உருவாகி உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியலில் சூறாவளியை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி! நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான துறையில் நடந்த பெரும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

டி.ஜி.பி.க்கு 232 பக்கங்கள் கொண்ட விரிவான கடிதத்தை அனுப்பிய ED, இதில் ஆதாரங்களுடன் கூடிய விவரங்களை சமர்ப்பித்துள்ளது. இந்த கடிதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'சீலிடப்பட்ட கவரில்' தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை ஆவணங்களில், ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள், இரண்டு திமுக எம்எல்ஏக்கள், ஒரு எம்பி உள்ளிட்டோருக்கு இடையே நடந்த வாட்ஸ்ஆப் உரையாடல்கள், டெண்டர் ஆவணங்கள் பரிமாற்றம், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டோரின் முகவரி, புகைப்படங்கள் போன்றவை ஆதாரத்துடன் இடம்பெற்றுள்ளன. 

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின், கமல், விஜய் வீட்டுக்கு சிக்கல்! ஈ.சி.ஆரில் விதிமீறல் கட்டிடங்களா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஒவ்வொரு நபரும் எவ்வளவு பணம் கொடுத்தனர் என்பது தொடர்பான அதிகாரிகள் மட்ட உரையாடல்களும் உள்ளன. இது பணத்திற்காக பணி நியமனம் (கேஷ் ஃபார் ஜாப்ஸ்), இடமாற்றம்-பதவி உயர்வு, டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 888 கோடி ரூபாய் முதல் 1020 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததாக ED குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போலீசாருக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் முறைகேடில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த ஊழல் விவகாரம் திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அரசியல் வட்டாரத்தில் சூறாவளி வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சி தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகள் இதை பெரிதும் பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. அமைச்சர் நேரு மீதான இந்த குற்றச்சாட்டுகள் திமுகவின் 'திராவிட மாடல்' ஆட்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் நடவடிக்கைகள் தீவிரமடையும் என்பது தெளிவாகிறது. 

இதையும் படிங்க: இப்போ என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்?! அமலாக்கத்துறை வளையத்தில் கே.என்.நேரு!! அண்ணாமலை விளாசல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share