×
 

உயரிய கௌரவம்..! தமிழக காவல்துறையினருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு..!

தமிழக காவல்துறையினர் 21 பேருக்கு மத்திய அரசின் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையினருக்கு மத்திய அரசின் சார்பில் ஜனாதிபதி விருது வழங்கப்படுவது இந்திய காவல்துறையின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகும். இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான பரிந்துரைகளைப் பெற்று, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் இறுதி செய்து அறிவிப்பு வெளியிடுகிறது. தமிழக போலீசார் இந்த விருதுகளை தொடர்ந்து பெற்று வருவது அவர்களின் சிறப்பான பணியையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

இந்த விருதுகள் முக்கியமாக இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று வீரத்திற்கான விருதுகள், மற்றொன்று சிறப்பான மற்றும் தகுதிவாய்ந்த சேவைக்கான விருதுகள். நீண்டகால சிறப்புப் பணி, திறமையான நிர்வாகம், குற்றக் கட்டுப்பாடு, சமூக நலத் திட்டங்கள், போதைப்பொருள் தடுப்பு, சைபர் குற்ற விசாரணை போன்ற துறைகளில் தொடர்ச்சியான உயர்தர சேவைக்காக வழங்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் உயர் அதிகாரிகள் மற்றும் அனுபவமிக்க அதிகாரிகளுக்கு கிடைக்கின்றன.

சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுகள் அறிவிக்கப்பட்டது. 3 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணியாற்றிய 21 பேருக்கு மெச்சத்தக்க பணிக்கான தகைசால் விருது வழங்கப்பட உள்ளது. டிஎஸ்பி தேவராஜன், கமாண்டண்ட் மணிவர்மன், உதவி ஆணையர் ஜான், கூடுதல் ஆணையர் அமுதாசுக்கு மெச்சதக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசின் புதிய செம்மொழி இலக்கிய விருது..! சாகித்ய அகாடமி பிரச்சனைக்கு மாற்றாக அறிவிப்பு..!

மேலும் டிஎஸ்பி சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய், கிருஷ்ணமூர்த்தி, ஜானகி, காளீஸ்வரி, லட்சுமணன், ரகுநாதன், மோகன் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில்குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகன் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சிறந்த உற்பத்தி... சென்னை ICF-க்கு விருது வழங்கி கௌரவித்த மத்திய அமைச்சர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share