நடைபயணத்திற்கு தடையில்லை - அன்புமணிக்கு கிடைத்த ஹேப்பி நியூஸ்...!
நடைப்பயணத்திற்கு தடை இல்லை என்று பாமகதலைவர் அன்புமணி தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.
நடைப்பயணத்திற்கு தடை இல்லை என்று பாமகதலைவர் அன்புமணி தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது. நேற்றைய தினம் நடைப்பயணம் தொடங்கிய நிலையில் தற்பொழுது நடைப்பயணத்திற்கு தடை இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். நேற்று இரவு டிஜிபி தடை விதித்திருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டது. தற்பொழுது நடை பயணத்திற்கு தடை இல்லை என்று அன்புமணி தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.
அன்புமணி நடைப்பயணம் தொடர்பாக டிஜிபியோட சுற்றறிக்கையில குறிப்பிட்டிருக்கிறது என்ன? ஏன் இந்த குழப்பம் என்றால், நேற்றைய தினம் தான் நடைப்பயணம் தொடங்கிய நிலையில் நேற்று இரவே நடைப்பயணத்திற்கு அனுமதி இல்லை அப்படின்னு தெரிவிக்கப்பட்டது. தற்போது அன்புமணிய தரப்பு தடை இல்லை அப்படின்னும் விளக்கம் அளித்திருக்கிறது. எப்படி புரிந்து கொள்ள முடியும்? என வழக்கறிஞர் பாலுவிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், அன்புமணி ராமதாஸ் நடைபயணம் நேற்று தொடங்கியது. இதற்கான முறையான அனுமதியை நாங்கள் பெற்று தான் இந்த நடைபயணத்தை தொடங்கினோம்.
இந்த சூழலில் நேற்று டிஜிபி அலுவலகத்திலிருந்து வந்த ஒரு சுற்றறிக்கை நீங்கள் குறிப்பிட்டதை போன்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் தரப்பில் நாங்கள் விசாரித்து தெரிந்து கொண்டதில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட அந்த கடிதத்தினுடைய நகலைத் தான், நாங்கள் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். மற்றபடி தடைவிதிப்பது என்று நாங்கள் தெரிவிக்கவில்லை என்ற விளக்கத்தை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த கடிதத்திலும் அப்படித்தான் உள்ளது. எனவே அது தவறுதலாக நேற்றைய தினம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் திட்டமிட்டபடி அன்புமணி ராமதாஸ் உடைய நடைபயணம் தொடரும் இன்றைக்கு செங்கல்பட்டு, உத்திரமேரூர் பகுதிகளில் மாலை அவருடைய சுற்றுப்பயணம் தொடர்கிறது. அவருடைய பயணத்த திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமதாஸுக்கு அன்புமணி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்... எதிர்ப்பை மீறி தொடங்கிய எழுச்சி பயணத்தில் ட்விஸ்ட்...!
இதையும் படிங்க: #BREAKING உரிமை மீட்பு பயணத்திற்கு சிக்கல்... அன்புமணிக்கு ராமதாஸ் வைத்த செக் - அதிரும் அரசியல் களம்...!