×
 

“கேட்கல... சத்தமா...” விஜய் பேச்சைக் கேட்க முடியாமல் கதறிய தொண்டர்கள்... கடகடவென கலைந்த கூட்டம்...! 

திருச்சியில் இருந்து தனது பிரச்சார பயணத்தை தொடங்கியது ஏன் என்பது குறித்து விஜய் பேசியது மட்டுமே, மக்களைச் சென்றடைந்தது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது முதல் பிரச்சார கூட்டத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், அங்கிருந்து தனது பிரத்யேக பிரச்சார வாகனம் மூலம் மரக்கடைக்கு பயணத்தை தொடங்கினார். 

வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்த தொண்டர்கள் விஜய்யைக் காண ஆர்வம் காட்டியதால், வெறும் 20 நிமிடத்திற்குள் மரக்கடைக்கு வந்து சேர வேண்டிய விஜய் வாகனம், ஆமை வேகத்தில் ஊர்ந்து 4 மணி நேரம் பயணித்தது. காலை 10.30 மணிக்கு மரக்கடையில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய விஜய், ஒருவழியாக மாலை 3 மணிக்கு வந்தடைந்தார். 

மரக்கடை அரசு பள்ளி அருகே தனது பிரச்சார வாகனம் மீது ஏறி நின்று விஜய் பேசத்தொடங்கினார். திருச்சியில் இருந்து தனது பிரச்சார பயணத்தை தொடங்கியது ஏன் என்பது குறித்து விஜய் பேசியது மட்டுமே, மக்களைச் சென்றடைந்தது. விஜய் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே தொழில்நுட்ப கோளாறு காரனமாக மைக், ஸ்பீக்கர் என இரண்டும் சரியாக வேலை செய்யவில்லை. 

இதையும் படிங்க: தவெகவுக்கு மட்டும் இவ்ளோ RESTRICTIONS... அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு -விஜய்

அவர் பேசுவது புரியாததால் விஜயை சுற்றி நின்று கொண்டிருந்த தொண்டர்கள் “கேட்கல, கேட்கல...” என சத்தமிட்டனர். அத்துடன் சைகை மூலமாக விஜய் பேசுவது தங்களுக்கு கேட்கவில்லை என புரிய வைக்க முயன்றனர். மேலும் விஜய் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆராவாரம் செய்து கொண்டிருந்ததால் அவர் பேசுவது சுத்தமாக கேட்காமல் போனது. காலை 7 மணியில் இருந்து விஜய் பேச்சை கேட்க வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த தொண்டர்களும், பொதுமக்களும் இதனால் அப்செட் ஆகினர். விஜய் பேச்சை கேட்க முடியாமல் போனால் என்ன அவரை பார்த்ததே போதும் என பெரும்பாலானவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். 

மைக் பிரச்சனை காரணமாக தொலைக்காட்சி நேரலைகளிலும் விஜய் பேசுவது ஒளிபரப்பு செய்யப்படுவது தடக்கலானாது. இதனால் விஜய் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள முடியாத ஏமாற்றத்துடனே தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதையும் படிங்க: புதுச்சேரியில் தவெக யாருடன் கூட்டணி? தலைமைக் கழகம் கொடுத்த விளக்கம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share