மதுரையில் முதல்வர் விஜய்..!! பரபரப்பை கிளப்பிய போஸ்டர்!! கடுப்பில் ரசிகர்கள்.. நடந்தது என்ன?
தாய்மையைப் போற்றும் இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரையில் முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர், சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தனது ஆட்சிக்காலத்தில் முதல்முறையாக மதுரைக்கு வருகை தந்துள்ளார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று நடைபெற்ற விழாவில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடை கொண்ட 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும். முதற்கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு சுமார் 75.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. தாய்மையைப் போற்றும் இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், மதுரை மாநகர் முழுவதும் ‘திரிஷா நற்பணி மன்றம்’ சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டர்களில் ஒருபுறம் குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் முதல்வர் விஜய்யின் புகைப்படமும், மறுபுறம் நடிகை திரிஷாவின் படமும் இடம்பெற்றுள்ளன. திட்டத்தை வரவேற்பதோடு, முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் அந்தப் போஸ்டர் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?: அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் நீதிபதிகள் அதிர்ச்சி!
விஜய்-திரிஷா இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததால், அவர்களின் திரை ஜோடி ரசிகர்களிடையே தனி இடம் பிடித்துள்ளது. சமீப காலமாக இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் போஸ்டர் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
சில விஜய் ரசிகர்கள், ஏற்கனவே திரிஷாவுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறித்து எதிர்மறையான கருத்துகள் எழுந்து வரும் சூழலில், இதுபோன்ற போஸ்டர்கள் தேவையா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் இதை வேண்டுமென்றே முதல்வரை அசிங்கப்படுத்தும் நோக்கில் ஒட்டப்பட்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 ஆண்டுகளுக்குப் பிறகு... மீனாட்சி அம்மன் மகா குடமுழுக்கு..! தேதியை அறிவித்த கோவில் நிர்வாகம்..!!