டிடிவி தினகரனுக்கு அடிக்கு மேல் அடி... அமமுகவில் அடுத்த முக்கிய விக்கெட் காலி... தவெகவிற்கு தாவிய மா.செ...!
அமமுக மாவட்ட செயலாளர் கே.சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்
டிடிவி தினகரன் எடப்பாடியுடன் சேர்ந்து திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முயற்சி பிடிக்கவில்லை என விளக்கம்.
பொள்ளாச்சி கோவை சாலையில் வசித்து வரும் கே சுகுமார் அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதிமுக பிளவு பட்டபோது டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்து தற்போது வரை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி
மிகப்பெரிய தோல்வியை தழுவியது.மேலும் அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தார்.
இந்நிலையில் அமமுக மாவட்ட செயலாளர் கே சுகுமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 40 ஆண்டு காலம் அதிமுகவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன் அதன் பிறகு அதிமுக பிளவு பட்டபோது அமமுகவில்
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்தேன்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!
தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் மாறுதலுக்கு பிறகு அமமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே தற்போது இருக்கக்கூடிய சூழலில் அதிமுகவை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் அதனுடைய தலைமையை என்றைக்கும் ஏற்காமல் தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்தை நம்முடைய அரசியல் எதிரியாக கொண்டு வளர்ந்த நாம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எடப்பாடி அவர்களுடைய தலைமையில் இன்றைக்கு செயல்பட்டுக்கொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தோடு கூட்டணி வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
அந்த நிலைமையை பார்க்கும் போது இதை எதையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மா நிச்சயமாக மன்னிக்காது என்கிற உணர்வோடு இன்றைக்கு தமிழக வெற்றி கழகத்தில் இணைக்க கூடிய சூழ்நிலையை உருவாகி இருக்கிறோம் கண்டிப்பாக வரக்கூடிய காலகட்டத்தில் தவெக நிர்வாகிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வராக விஜய் வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் புரட்சி தலைவர்
கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் என்னுடன் இணைந்துள்ளனர் என தெரிவித்தார்.
அண்ணா திமுக எப்போதும் திமுகவை எதிரியாகவே பாவித்து வளர்ந்த கட்சி ஆனால் இன்றைக்குபதவி வெறியில் திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கக்கூடிய
எண்ணத்தில் இருந்து கொண்டுள்ளார்கள். அமமுகவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தவெக விற்கு ஆதரவு அளித்தது பொதுமக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆதரவு தெரிவித்தார். அவரும் திமுகவை எதிர்த்து வளர்ந்த அரசியல்வாதி தான் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக, அமமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?! சிபிஐ விசாரணை கோருவோம்! டிடிவி தினகரன் மிரட்டல்!