×
 

பத்த வச்சிட்டீயே பரட்டை.... NDA கூட்டணிக்குள் குண்டைப் போட்ட அண்ணாமலை... அமித் ஷாவிற்கு பறந்த ரிப்போர்ட்...!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய விவகாரத்தில் அண்ணாமலையின் உள்குத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாடாளுமன்ற தேர்தலின் போது நட்டாற்றில் விடப்பட்ட பாஜகவிற்கு ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் பக்க பலமாக இருந்தார்கள். அப்போது அதிமுக தலைவர்களையும், அமைச்சர்களையும் அவதூறாக அண்ணாமலை விமர்சித்ததால் அதிமுக கூட்டணியை விட்டு கழன்று கொண்டது. அதேசமயம் நாடாளுமன்ற தேர்தலின் போது ஓபிஎஸ், டிடிவி இருவரும் அண்ணாமலையுடன் இணைந்து தீவிரமாக தேர்தல் பணியாற்றினர். 

அதிமுகவில் இருந்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் நயினார் நாகேந்திரனை ஓரங்கட்டப் பார்த்ததாகவும், அந்த கோவத்தில் தற்போது பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் ஓபிஎஸை கண்டுகொள்ளவில்லை என்றும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதனால் தான் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகினார். 

அதேபோல் டிடிவி தினகரனும் இன்று அளித்துள்ள பேட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை, எங்களை ஏதோ துக்கடா கட்சி போல பாஜக நடத்துகிறது அதனால் தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம் என படுஓபனாகவே கூறிவிட்டார். இதை இப்போது அல்ல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மூப்பனார் நிகழ்ச்சியின் போதே டிடிவி, பாஜக மீது அதிருப்தியில் தான் இருந்தாராம். 

இதையும் படிங்க: ஒதுங்கி நிற்கும் அண்ணாமலை! பாஜக தலைமை மீது அதிருப்தி? என்ன சொன்னாரு தெரியுமா?

அந்நிகழ்ச்சிக்கு கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலையிடம் ஆதங்கத்தை டிடிவி தினகரன் கொட்டித்தீர்த்துள்ளார். அப்போது அண்ணாமலை தன் பங்கிற்கு, “கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவியுங்கள். கெத்து காட்டுங்கள். அப்போது தான் உங்கள் வழிக்கு பாஜக தலைமை வரும்” என கொம்பு சீவி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்தே டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அமித் ஷாவின் காதுகளுக்கும் நயினார் நாகேந்திரன் கொண்டு சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவில் தனி ராஜாங்கம் செய்யும் அண்ணாமலையை அடக்காவிட்டால், வர உள்ள சட்டமன்ற தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டியது தான் என பாஜக மூத்த நிர்வாகிகள் அமித் ஷாவிடம் புலம்பித் தள்ளியுள்ளார்களாம். 
 

இதையும் படிங்க: இபிஎஸ் குறித்து மனம் திறக்கப்போகும் செங்கோட்டையன்... அண்ணாமலை கொடுத்த அதிரடி பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share