×
 

முதலமைச்சர் யார்? தேர்தலுக்கு பின்புதான் தெரியும்... டிடிவி தினகரன் விளக்கம்!!

தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஆளுங்கட்சியாக திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார். அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதுமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 7ல் மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். ஜூலை 7 முதல் ஜூலை 21 வரை 7 மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பொதுமக்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளார்.

இதையும் படிங்க: விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் அதிமுகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பின்புதான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அமமுக நீட்டிக்கிறது.

கூட்டணி மந்திரிசபை என்பதை தான், தமிழகத்தில் NDA கூட்டணி  ஆட்சி என அமித்ஷா கூறினார். NDA கூட்டணி  ஆட்சி என்பதற்கு கூட்டணி மந்திரிசபை என்பதுதான் பொருள். முதலமைச்சர் யாரென்று கூட்டணி சேர்ந்து முடிவு செய்வார்கள். தேர்தலுக்குப் பின்புதான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம். தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அமமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கழன்று ஓடிய அரசுப்பேருந்து சக்கரங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்... திமுக அரசுக்கு டிடிவி கண்டனம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share