×
 

உங்க முகத்திரை கிழிஞ்சிடும் ஜாக்கிரதை... ஓபிஎஸுக்கு ஓபனாக சவால் விட்ட டிடிவி தினகரன்...!

ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். விஜய் திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறியது தனிப்பட்ட விமர்சனம். பொதுவாக அப்படி பேசுபவர் அல்ல.. இன்னும் அதை பார்க்கவில்லை.  தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்ப்பது தான் நல்லது.

திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். விவசாயிகள், அரசு ஊழியர்களும், செவிலியர்கள் அனைத்து தரப்பு அரசு தொழிலாளர்களும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவில்லை. கூலிப்படையை தான் தமிழ்நாட்டில் உருவாக்கி உள்ளது போதைப் பொருள்கள் குழப்பம் அதிகமாகி உள்ளது.

ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. குழந்தைகள் முதல் மூதாட்டி வரை.. பாலியல் நடக்கிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைந்து விட்டோம் என்ற பயம் வந்துவிட்டது.  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குடும்ப நிதி கிடையாது இது அரசு நிதி. தேர்தல் பயத்தினால் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: அவரு அப்படி பேசுற ஆளு இல்லங்க..! இருந்தாலும்... நயினாருக்கு அறிவுரை சொன்ன TTV தினகரன்..!

இறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் பலமாக உள்ளது புதிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. ஜெயலலிதா வழி வந்தவர் ஓபிஎஸ். இன்னும் ஒரு சிலர் வெளியே இருப்பவர்கள் தங்கள் பலனை பார்க்காமல் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என சொல்வது உண்மை என்றால் அவர்கள் தாங்களாக இணைய வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்றால் உறுதியாக இருக்க வேண்டும்.  ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம் இதில் ஒன்றியாமல் இருந்தால் அவர்களின் முகத்திரை கிழிந்து விடும். இல்லையென்றால் அம்மாவின் தொண்டர்களும் புறந்தள்ளி விடுவார்கள். 

 அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் உண்மையில் திமுக கூட்டணியில் இருக்கப் போகிறார்களா இல்லையா என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசுக்கு - திமுகவிற்கும் நடக்கும் பணி போர் விவதம் எந்த டிபேட் நடத்துவதாக தெரியவில்லை என்றார். 

 பங்காளி சண்டை முடிந்து பாகப்பிரிவினை (தொகுதி பங்கீடு) போய்க் கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை கணிசமான தொகுதிகள் ஒதுக்கீடு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதில்  அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எங்க கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது.

அதிகாரத்தில் பங்கு கேட்பது எங்கள் கன்டிஷனில் இல்லை.எனது ஆசையே தவிர நோ கண்டிஷன். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொகுதியில் தோற்கடிக்க சபரீசன் திட்டமிட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சபரீசன் அல்ல மாரீஸ்சன் வந்தாலும் கவலை இல்லை.தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் அனுமதி தந்ததில்லை. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம் எனக்கூறினார். 

இதையும் படிங்க: 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எடுபடாது.. திமுக தோல்வி உறுதி..! TTV தினகரன் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share