காலியாகும் அமமுக கூடாரம்... முக்கிய நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு... டிடிவி தலையில் விழுந்தது பேரிடி...!!
ராமநாதபுரம் மாவட்ட (கிழக்கு) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
ராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரில் அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் MLA முருகன் தலைமையில் அவரது வீட்டில் தேர்தலில் அமமுக, அதிமுக தோல்வி அடைந்தது குறித்து தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முருகன், NDA கூட்டணியில் அதிமுக 107 இடங்களில் 3வது, 4து இடத்தை பிடித்தும், 17 இடங்களில் டெபாசிட் இழந்தும் உள்ளது. ஆர்.பி உதயகுமார், ஜெயக்குமார் போலவே டிடிவி தினகரன் நிலைமையும் உள்ளது. ஆகவே அமமுக கட்சியில் பயணிக்க வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பதால் அமமுக கட்சியில் இருந்து வெளியேறியதாக முருகன் அறிவித்தார்.
அவரை தொடர்ந்து அமமுக கட்சியில் இருந்த ஒன்றிய நகர பேரூர், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் தாங்கள் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தும் பதவியிலிருந்தும் அடிப்படை ஒட்டுமொத்தமாக விலகுவதாகவும் அறிவித்தனர்.
இதனை ஒட்டி அமமுக முருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நமது NDA கூட்டணி படுதோல்வி சந்தித்ததின் விளைவாக ஒருங்கிணைந்த இராமநாதபுர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோலின் படியும் இராமநாதபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயலாளராகிய நான் வகித்து வந்த மாவட்ட கழக செயலாளர் பதவியை இன்று முதல் ராஜினாமா செய்கிறேன்.
இதையும் படிங்க: MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்.. கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!
மேலும் இராமநாதபுர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய நகர பேரூர், ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் தாங்கள் வகித்து வந்த பதவியை உறுப்பினர் ராஜினாமா செய்தும் பதவியிலிருந்தும் அடிப்படை ஒட்டுமொத்தமாக விலகுவதாகவும் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. இது டிடிவி தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
இதையும் படிங்க: நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!