தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வர ரெடி ஆனா... டிடிவி தினகரன் போட்ட அதிரடி கன்டிஷன்...!
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைய தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மணவாள மாமுனிகள் மடத்தின்ஜியர் சடகோப ராமானுஜர் அவர்களிடம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய விஷயம் என்றும் நேர்மையான நல்ல மனிதர் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், நயினார் நாகேந்திரனை பொறுத்தவரையில் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர் என்றும் நான் வெளியேறுவதற்கான காரணத்தை அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்றும்,
நயினார் நாகேந்திரன் மீண்டும் கூட்டணியில் இணைய அழைப்பு விடுப்பதாக கூறிய நிலையில், என்னுடைய தொடர்பு நம்பர் அவரிடம் இருப்பதாகவும் அவர் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்று கூறினார்.
செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு அவர் முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அது கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார். எந்த துரோகத்திற்காக நாங்கள் கட்சி தொடங்கினோமோ, அந்த துரோகத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியில் இருக்கக்கூடிய நபர்களில் எனக்கு யார் மீதும் கோபம் இல்லை என்றும், அங்கு இருக்கக்கூடிய ஒரு நபரும் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு தான் எங்கள் எதிரி என்று கூறினார்.
இதையும் படிங்க: “டிடிவி-கிட்ட எவ்வளவோ சொன்னேன்... கேட்கலையே??” - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அண்ணாமலை...!
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் வட மாவட்டத்தில் 10% இட ஒதுக்கீடை அறிவித்து அங்கு பிளவை ஏற்படுத்திய நிலையில் அமைதியாக உள்ள தென்தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற ஏழரை பழனிச்சாமி எனும் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருவதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
விஜயின் தேர்தல் பிரச்சாரத்தை குறித்த கேள்விக்கு தங்களை விமர்சிக்காத யாரையும் தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என்றும், என் நாட்டில் தேர்தலில் போட்டியிட ஜனநாயக உரிமை உண்டு என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவுக்குள் கொண்டு வர துடிதுடியாய் செங்கோட்டையன்... பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் காரணம்...!