×
 

வில்லன் விஜய்... முக்கிய பாயிண்ட்களை அடுக்கி சி.எம்.ஐயே வச்சி செஞ்ச டி.டி.வி தினகரன்...!

முதல்வர்  விஜய் வில்லன் போல் மிரட்டுகிறார்  தனது டேபிளில் 3 ஃபைல் இருக்கிறது என்று மிரட்டுகிறார் ,  முதல்வர் விஜய்  ஹிட்லர் போல் செயல் படுகிறார்   திராவிட கட்சிகள் அஞ்சாது   தஞ்சையில்  செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன்  கண்டனம்

தஞ்சையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  டி.டி.வி. தினகரன்,  அ.தி.மு.க  அழிந்துவிடும் என்று வன்மமாக இருக்கிறார் செங்கோட்டையன்.  புதிதாக வந்த தவெக விற்கு வால் பிடித்து கொண்டுருக்கும்  செங்கோட்டையனுக்கு  டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

 பரந்தூர் விமான நிலையம்  தடுக்கப்பட்டது  வரவேற்கதக்கது. விஜய்  3 ஃபைல் இருக்கு என்று மிரட்டுகிறார்   அப்பட்டமான  மிரட்டல் அதற்கெல்லாம் திராவிட கட்சிகள் அஞ்சாது. அற்பர்களுக்கு வாழ்வு வந்ததுபோல் இருக்கிறார்கள்.

அமைச்சர் நிர்மல்குமார்  பா.ஜ.க வில் இருந்தவர் அடுத்து அ.ம.மு.க விற்கு வந்தவர்,  அ.தி.மு.க வில் இருந்தவர்  தற்போது தவெகவில் அமைச்சராக இருக்கிறார் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு  டெண்டர் விட்டதில் பாதிப்பு ஏற்பட்டள்ளது.

இதையும் படிங்க: அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்.? வாக்குறுதி என்ன ஆச்சு CM..! வலுக்கும் கண்டனம்.!!

ஜோஸ் ஆலுகாஸ் கடைக்கு அம்பாசிட்டராக இருந்தவர் மோதிரம் திட்டத்தை அவர்களுக்கு கொடுத்துருக்கிறார்.  தமிழகம் அனைத்து துறையிலும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது

ஜோசியருக்கு பதவி தருகிறார். செங்கோட்டையன், ஜே.சி.டி பிரபாகரன் இவர்களல்லாம் தவெக வில் சேர்ந்தது காலத்தின் கொடுமை. அ.தி.மு.க வும்  -  அ.ம.மு.க வும் ஒன்னுதான் நான் அவர்களுடன் தான் இருக்கிறேன் என்றவர்

வேலுச்சாமி போன்றோர் வெளியில் இருந்து விமர்சிக்க கூடாது என்றார்   அ.தி.மு.க வை பலகீனப்படுத்தகூடாது. விஜயை  பிரதமராவார்  வேண்டும் என்று  தவெக வினர் கூறிவருகிறார்களே என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் சொன்னதை செய்ய வேண்டும்  என்றார்.

உதயநிதி சரியாக தான் சொல்கிறார்  ரீல் அரசாக இருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியை கழற்றிவிட்டு,  சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கவும் வாய்ப்பு இருக்கிறது 

மக்களை ஏமாற்ற வந்தவர்கள்,   கொலைகள் குறையவில்லை, போதை பொருள் குறையவே இல்லை  யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஹிட்லர் பாணியில் போகிறது,   ஆட்சியை நடத்த பாருங்கள்  என்றவர்

அரிசி பருப்பு விலை உயர்ந்துவிட்டது  அவற்றை குறைக்க பாருங்கள். விஜய் சிறந்த வில்லனாக செயல்படுவதற்கு பத்ம பூசன் விருதே  தரவேண்டும்  என்றார். எதிர்கட்சி எம்.எல்.ஏ க்களை  தாஜா பண்ணவே கார் தருவதாக அறிவித்துள்ளார் என்றார்

இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள்..! Ttv தினகரன் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share