“சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!
தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அரசியலுக்கு வந்த அவர், அவரே எதிர்பாராத விதமாக, ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்.
உண்மையான வாழ்க்கையில் அவர் ஒரு மாபெரும் வில்லன் என்பதை, அவருடைய உடல் மொழியும் வார்த்தைப் பிரயோகமும் வெளிப்படுத்தி இருக்கின்றன என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். மிகவும் தரம் தாழ்ந்து அவர் பேசுகிறார். அவருடைய தரம் இதுதான் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு திருமாவளவன் அருமையாக பதில் சொல்லியிருக்கிறார்.
விஜய் தலைமையில் ஒரு கட்சி உருவாகியிருக்கிறது. அதாவது, விஜய்க்கு 108 தொகுதிகளில் மட்டுமே மக்கள் ஆதரவளித்தார்கள். அவருக்கு அறுதிப் பெரும்பான்மை அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் கையில்தான் 126 தொகுதிகள் உள்ளன. திமுக, அதிமுக கூட்டணிக்கு மக்கள் வெற்றி அளித்திருக்கிறார்கள்.
ஆனால், இவர்களின் வழியே சென்று காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும், கம்யூனிஸ்ட் கட்சிகளாக இருக்கட்டும், திருமாவளவனாக இருக்கட்டும், ஐயமும் இல்லாமல் அவர்களுக்கு ஆதரவு அளித்திருப்பது உண்மை. இதற்காக அவர்களும் வருத்தப்படப் போகிறார்கள்.
இதையும் படிங்க: திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!
இப்பொழுதே, நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து பேசுகிறார் என்பதைப் பார்க்க முடிந்தது. அவருடைய தரம் இதுதான் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு திருமாவளவன் அருமையாக பதில் சொல்லியிருக்கிறார்.
அவருடைய உடல் மொழியாக இருக்கட்டும், வார்த்தைப் பிரயோகமாக இருக்கட்டும், இதையே மற்றவர்கள் பேசினால் அவர்களை கைது செய்கிறார்கள். "என்ன, எலும்பை முறித்துவிடுவீர்கள் என்கிறீர்களா?" என்று எல்லாம் பேசுகிறார். அவர் எப்படி பேசுகிறார்? யாரைப் பார்த்துக் கேட்கிறார்?
மிசா என்பது இந்தியா முழுவதும் திருமதி இந்திரா காந்தி அம்மையார் கொண்டு வந்த ஒரு தவறான நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரியும். பல மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் ரீதியாக செயல்பட்டவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அதில் திரு. ஸ்டாலின் உட்பட பலரும் சிறைக்குச் சென்றார்கள். அவர்களை காவல்துறையினர் மிக மோசமான அளவில் தாக்கினார்கள்.
அதையெல்லாம் பிரதிபலிக்கும் விதமாக, விஜய் தனது சினிமாவில் மட்டும்தான் ஹீரோவாக இருக்கிறார். உண்மையான வாழ்க்கையில் அவர் ஒரு மாபெரும் வில்லன் என்பதை, திருமாவளவன் சொன்னது போல, அவருடைய உடல் மொழியும் வார்த்தைப் பிரயோகமும் இன்று மக்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றன.
சினிமாவில் பார்த்த ஹீரோ விஜய் நல்லவர் என்று நினைத்தோம். ஆனால், அவர் உறுதியாக நல்லவர் இல்லை. அவர் மிகவும் தீமையானவர், சுயநலமிக்கவர். தனது நலனுக்காக யாரையும் பலி கொடுப்பார்; யாரையும் தூக்கி எறிவார்.
இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அரசியலுக்கு வந்த அவர், அவரே எதிர்பாராத விதமாக, ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆட்சியை எப்படி நடத்துவது என்பதுகூட தெரியாத அளவில்தான் அவர் இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு அடிப்படைப் புரிதலே இல்லை; சொல்லப்போனால், காமன் சென்ஸ்கூட இல்லை.
இதையும் படிங்க: நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!