×
 
☰

தூத்துக்குடி கொடூரம்.. தாய் கொலை.. கடத்தப்பட்ட 2 சிறுமிகள்.! நடந்தது என்ன.? SP விளக்கம்.!!

தூத்துக்குடியில் தாயை கொலை செய்துவிட்டு இரண்டு சிறுமிகளை கடத்திய நிலையில் அவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக SP விளக்கம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில், தாய், தந்தையைத் தாக்கிவிட்டு கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளித்திருக்கிறார். தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முதலூர் கிராமத்தில் இன்று அதிகாலை ஒரு மணியளவில், மேரி விஜிலா மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஞானபிரகாஷ் என்ற நபர் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும், அவர்களது மகனையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த இரண்டு சிறுமிகளையும் கடத்திச் சென்றுள்ளார்.

இந்தத் தாக்குதலில் மேரி விஜிலா உயிரிழந்தார். முத்துகிருஷ்ணன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, திருநெல்வேலிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளையும் காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட நபரின் வீட்டுக்குச் சென்று மீட்டுள்ளனர். பின்னர், சிறுமிகள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த தம்பதியின் மூத்த மகளுக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பழக்கத்தைக் கண்டித்ததால், அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்ட நபருடனான தொடர்பைச் சில நாட்களுக்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இன்று அதிகாலை அந்த நபர் வீட்டுக்கு வந்து, சிறுமியின் தாய், தந்தை மற்றும் அவரது தம்பியை அரிவாளால் வெட்டியுள்ளார். பின்னர், இரண்டு சிறுமிகளையும் அழைத்துச் சென்று ஓரிடத்தில் மறைத்து வைத்துள்ளார். காவல்துறையினர் அங்கு சென்று இரண்டு சிறுமிகளையும் மீட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: குலசேகரபட்டினம் தசரா..! இன்றிரவு சூரசம்ஹாரம்..! குவியும் பக்தர்கள்..!!

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமி மற்றும் அவரது சகோதரரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: களைகட்டிய குலசை தசரா திருவிழா..! படையெடுக்கும் மக்கள்... அணிவகுக்கும் வாகனங்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share