×
 

#BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!

தமிழக முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, விரிவாக்கப்பட்ட அமைச்சரவை செயல்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றங்கள் அல்லது அவசரகால சூழல்களில் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குள் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த அமைப்பு, முன்பு திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட மாதிரியை ஒத்திருந்தாலும், தவெக அரசின் புதிய அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டார். 

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அமைச்சர் வெங்கட்ரமணனும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் மரிய வில்சனும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் ராஜமோகனும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தென்னரசுவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ரஞ்சித் குமாரும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சரத்குமாரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் வன்னியரசும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: ராஜ்யசபா சீட்டுக்கு முந்தும் காங்கிரஸ்!! விஜய் யோசனை! ப.சிதம்பரத்தை தொடர்ந்து கிரிஷ் சோடங்கரும் அழுத்தம்!

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு காந்திராஜ், தர்மபுரி, அரியலூர் மாவட்டத்திற்கு ராஜ்குமார் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அமைச்சர் ஷாஜகான் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வினோத், திருச்சி மாவட்டத்திற்கு ரமேஷ், கரூர் மாவட்டத்திற்கு விஜயலட்சுமி, நாமக்கல், மாவட்டத்திற்கு லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திற்கு அமைச்சர் அருண்ராஜ், நீலகிரி மாவட்டத்திற்கு கமலி, வேலூருக்கு விஜய பாலாஜி, ஈரோட்டுக்கு செங்கோட்டையன், கோவைக்கு சம்பத்குமார் என பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மதுரை மற்றும் தேனி மாவட்டத்திற்கு நிர்மல்குமார், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முகமது பர்வேஸ் உறுப்பு அமைச்சர்கள் ஆகி உள்ளனர். சிவகங்கை - TK. பிரபு, கிருஷ்ணகிரி - S. கீர்த்தனா, விருதுநகர் - கு. ஜெகதீஸ்வரி, திருவாரூர் - பெ. விஸ்வநாதன், தூத்துக்குடி- ஸ்ரீநாத், இராமநாதபுரம் - மதன் ராஜா, சேலம் - விஜய் தமிழன் பார்த்திபன், கன்னியாகுமரி - ராஜேஷ் குமார், தென்காசி - ராஜீவ், திண்டுக்கல்- விக்னேஷ் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: "வாய் கிழிய வெற்று வசனம்... அதிகார போதை"..! விளாசிய அதிமுக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share