காலியாகும் அதிமுக கூடாரம்..? முக்கிய தலைகள் தவெகவில் ஐக்கியம்..!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்பாராத வகையில் பெரும் தோல்வியை சந்தித்தது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஒற்றைப் பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்தது.
தி.மு.க. 59 இடங்களுக்கு குறைந்தது, அதிமுக 47 இடங்களைப் பெற்று, முதல் முறையாக தொங்கு சட்டமன்றம் உருவானது. இந்தத் தோல்வி தி.மு.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 2021 தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2026 சட்டமன்ற தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
இதற்கிடையில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக கட்சியின் பிளவு மற்றும் அதிருப்தி உள்ளிட்டவை காரணமாக பிளவுபட்டு வருகிறது. பல்வேறு அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
இதையும் படிங்க: இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி... தவெகவில் ஐக்கியமாகும் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்?... பரபரப்பு பின்னணி...!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியம் ஆகினர். மேலும் ஏராளமான அதிமுகவினர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், மரிய வில்சன் ஆகியோர் முன்னிலையில் சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: "வாயில் நல்லா வருதாம்"..! முதல்வர் வாயில் வராத விஷயம் தெரியுமா.? ஜெயக்குமார் விளாசல்..!