×
 

2026 தேர்தலுக்கு அஜெண்டா ரெடி… பழைய கணக்கை வைத்து திமுகவுக்கு ஸ்கெட்ச்- ஆதவ் போட்ட திட்டம்..!

திமுக 30 சதவீதம், காங்கிரஸ் 10 சதவிகிதம். 40 அதோட சேர்ந்து பாமக 8% சதவிகிதம்... விசிக எல்லாம் சேர்த்து 55 சதவீதம் வரும் என்று சொன்னார்கள். ஆனால் 203 தொகுதிகளில் அன்றைக்கு இருந்த ஜெயலலிதா வெற்றி பெற்றார்கள்.

1967ல் அண்ணா ஏற்படுத்தியது போல, 1977 எம்ஜிஆர் ஏற்படுத்தியது போல அடுத்த பிரளயம் தமிழகத்தில் ஏற்படும். அதற்கு எல்லாம் அஜெண்டா ரெடி'' என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

மமல்லபுரம் அருகில் உள்ள  பூஞ்சேரி பகுதியில் நடைபெற்ற தவெக முதலாம் ஆண்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ''தூக்கத்தில் எல்லாம் இப்போது ஆளுங்கட்சிக்கு என்ன நடக்கிறது என்றால், தூங்கும்போதும், நடக்கும் போதும் இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது என்று மட்டுமே கவலையாக இருக்கிறது. இது என்ன களிமண்ணால் செய்யப்பட்ட கூட்டமா? ரசிகர் கூட்டம். இப்படித்தான் எம்ஜிஆரை பார்த்து சொன்னீர்கள் 1977-ல் மக்கள் உங்களைத் தூக்கிப் போட்டார்கள் 89 வரை உங்களால் வர முடியவில்லை . அவர் உயிருடன் இருக்கும் வரை வரவில்லை. ஏளனம் பேசுவதை நிப்பாட்டுங்கள். ஒருத்தரை ஒருமையில் பேசுவதை நிப்பாட்டுங்கள். 

 தன்னுடைய பொருளாதாரத்தை, தன்னுடைய தொழிலை தூக்கி எறிந்து விட்டு வந்த தலைவர் விஜயை மக்கள் வரவேற்பார்கள். Youtube-ல் உட்கார்ந்து கொண்டு, ஜான் ஆரோக்கியசாமி அவர்களுக்கும், பொருளாளர் அவர்களுக்கும், ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும், புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கும் பிரச்சினை என்று வதந்தி பரப்புகிறார்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். ரொம்ப கிளியராக இருக்கிறோம்.

இதையும் படிங்க: 'பாசிசத்துக்கும்-பாயாசத்திற்கும் சண்டை..' இட்ஸ் வெரி ராங் ப்ரோ… திமுக- பாஜகவை வெளுத்தெடுத்த விஜய்..!

நிறைய பேர் சினிமாவில் நடித்தார்கள் எதற்கு என்றால் பிரபலமாக வேண்டும். அரசியலுக்கு வர வேண்டும். அரசியலுக்கு வந்தவுடன் துணை முதலமைச்சர் ஆக வேண்டும். அவ்வளவுதான். இங்கே உண்மையாக இருந்து நம்பர் ஒண்ணாக இருக்கிறார் விஜய். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்கு ஒரு உழைப்பு வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவு வேண்டும். இங்கே மக்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் நம்பர் ஒண்ணாக முடியாது. நீங்கள் எந்த விதமான ராஜாங்கத்தை உருவாக்கலாம். நீங்கள் எந்த விதமான மன்னராட்சியையும் உருவாக்கலாம்.

 1917 ரஷ்ய புரட்சி, 1789 பிரெஞ்சு புரட்சி. இந்த புரட்சிகளைப் படியுங்கள். இந்த மன்னராட்சி அதிகாரத்தை பயன்படுத்துவது, எங்கள் கட்சிக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, இதையெல்லாம் நிறுத்துங்கள். சிறை செல்வதற்கும் நாங்கள் தயார். நாங்கள் சிறைக்கும் செல்வோம்... செயிண்ட்டஜார்ஜ் கோட்டைக்கும் செல்வோம். அடுத்த 62 வாரங்கள் நாம்தான் எதிர்கட்சி. தலைவர் தான் எதிர் கட்சி தலைவர். தயாராகுங்கள்.எதையும் செய்யுங்கள். உங்கள் கூட்டணி பலமான கூட்டணி. ஆனால் அதெல்லாம் உடையும்.

அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். 2011 இதேதான் யோசித்தார்கள். திமுக 30 சதவீதம், காங்கிரஸ் 10 சதவிகிதம். 40 அதோட சேர்ந்து பாமக 8% சதவிகிதம்... விசிக எல்லாம் சேர்த்து 55 சதவீதம் வரும் என்று சொன்னார்கள். ஆனால் 203 தொகுதிகளில் அன்றைக்கு இருந்த ஜெயலலிதா வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சித் தலைவராகக்கூட ஆக முடியவில்லை. ஆகையால், தமிழக மக்களுக்கு தெரியும். ஆட்சியில் நடக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு தெரியும். 36% மின்சார கட்டணத்தை ஏற்றி, இன்றைக்கு எந்த தொழிற்சாலையும் செயல்பட முடியவில்லை.

 1967ல் அண்ணா ஏற்படுத்தியது போல, 1977 எம்ஜிஆர் ஏற்படுத்தியது போல அடுத்த பிரளயம் தமிழகத்தில் ஏற்படும். அதற்கு எல்லாம் அஜெண்டா ரெடி. எல்லா திட்டமும் ரெடி. எல்லாரும் சொல்லுவார்கள்,  தேர்தல் அரசியல் திமுகவுக்குத் தான்  எல்லாம் தெரியும். இவர் பெரிய மினிஸ்டர்... ஒரு பூத்துக்கு பத்தாயிரம் கொடுப்பார். அவர் கோயம்புத்தூர் பக்கம் எல்லாம் பார்த்துக் கொள்வார்... ஒருத்தர் திருச்சி பக்கம் பார்த்துக் கொள்வார்... ஒருத்தர் திருவண்ணாமலை பக்கம் பார்த்துக் கொள்வார் என்று சொல்வார்கள். 1967- மக்கள் தூக்கி போட்டதும், 1977-ல் மக்கள் தூக்கிபோட்டதும் எம்ஜிஆர் அவர்களை கொண்டு வரும்போது பணபலத்தை நோக்கி அல்ல. மக்கள் செல்வாக்கை நோக்கி..'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில்தான் முதன் முதலில் சிபிஎஸ்இ ஸ்கூல் வந்துச்சு.. உண்மையை உடைத்த பிஜேபி நாராயணன் ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share