விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
விஜய் வாகனத்தை பின்தொடர்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளைஞரை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரப் பயணங்கள் தொடங்கியதிலிருந்தே, அவரது பிரச்சார வாகனத்தை ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார்களில் பின்தொடர்வது வழக்கமான காட்சியாக இருந்து வருகிறது.
இது உற்சாகத்தின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், சாலைப் போக்குவரத்தில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்வின்போது, விஜய் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த சில தொண்டர்கள் அஜாக்கிரதையாக சென்றதால் விபத்துக்குள்ளாகினர்.
இதில் அவர்கள் கீழே விழுந்து லேசான காயங்களுடன் உயிர் தப்பினாலும், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 4 ஆம் தேதி தஞ்சையில் விஜய் பிரச்சார நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் அவரது வாகனத்தை சிலர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பேர் விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்..!! சிபிஐ அதிரடி..!!
இதில் விக்னேஷ் என்ற இளைஞர் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து படுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்னேஷை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று நலம் விசாரித்தார். அவரது மருத்துவச் செலவுகளை ஏற்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடா? சுடுகாடா? எங்க போய் முடியப்போகுதோ... தவெக ஆவேசம்..!!