×
 

தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்... கதர் கட்சியில் இருந்து விஜய்க்கு வந்த முதல் வாழ்த்து...!

முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதித்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக, காங்கிரஸ்க்கு இடையே தேர்தல் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு சிக்கல் ஏற்பட்டது. பல காங்கிரஸ் தலைவர்கள், விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்று போர்கொடி தூக்கி இருந்தனர். ஆனால், கடைசியில் திமுக உடன் தான் காங்கிரஸ் கூட்டணி போட்டது.

110 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளதால், தனிப்பெரும்பான்மையான 118 இடங்களை எட்டவில்லை என்றால் கூட்டணிக்கு மற்ற கட்சிகளை விஜய் அழைக்க நேரிடும். இந்த சூழலில் 4 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு விலகி தவெக-விற்கு ஆதரவளிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் பாமக போன்ற கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்கள் விஜய்யைச் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்றும், அவர் வெறும் நடிகர் அல்ல, அரசியல்வாதி என்றும் காங்கிரஸ் தரப்பிலிருந்து பாராட்டுக்கள் வந்தன. தமிழகத்தில் காங்கிரஸ் புத்துயிர் பெற வேண்டுமானால், விஜய்யுடன் கூட்டணி அமைப்பதே சரி என ராகுல் காந்தி கருதுவதாகச் செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படையாக தவெக உடன் கூட்டு சேர்வதை பற்றி பேசினாலும், தலைவர்கள் அப்படி உடைத்து பேசவில்லை.

இதையும் படிங்க: விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

தற்போது தவெக முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர், போட்டுள்ள பதிவு கவனத்தை பெற்றுள்ளது. இதனால் தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு விஜயின் தந்தை சந்திரசேகர் அழைப்பு விடுத்திருக்கிறார். 

இந்நிலையில் முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதித்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் தவெக - காங்கிரஸ் இடையே கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 
 

இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share