திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!
திமுக மூழ்கும் கப்பல் என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்தார்
ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று முறை முதலமைச்சராகப் பதவி வகித்தவர், நீண்ட காலம் அதிமுகவின் முக்கியத் தூணாக இருந்தவர் திடீரென திமுகவில் இணைந்தது பலருக்கும் எதிர்பாராதது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இன்று காலை, அவர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றபோது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் அவரை "அருமைச் சகோதரர்" என்று அழைத்து வரவேற்றிருப்பது, திமுக தரப்பில் இதை பெரிய வெற்றியாகக் கருதுவதை காட்டுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இன்று காலை, அவர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றபோது, முதலமைச்சர் ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அஜித் குமார் போன்று புனிதன் கொலை..? விசாரிங்க சிஎம் சார்..! Tvk அருண்ராஜ் வலியுறுத்தல்..!
ஆனால் எதிர்க்கட்சிகள் இதை வேறு கோணத்தில் பார்க்கின்றன. அருண்ராஜின் கருத்து அதைத்தான் பிரதிபலிக்கிறது. OPS-இன் வருகை திமுகவுக்கு பலம் சேர்க்கும் என்பதற்கு பதிலாக, ஏற்கனவே பலவீனமடைந்து வரும் கப்பலுக்கு கூடுதல் சுமை என்று.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியும் கொள்கை பரப்புச் செயலாளருமான அருண்ராஜ் திமுகவை "மூழ்குகின்ற கப்பல்" என்று விமர்சித்திருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் நாமக்கல்லில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். திமுக ஏற்கனவே சரியாகப் போகும் நிலையில் இருப்பதாகவும், அதற்கு மேலும் ஓ.பன்னீர்செல்வம் போன்ற ஒருவர் இணைவது கூடுதல் சுமையாக அமைந்து, கப்பலை இன்னும் வேகமாக மூழ்கடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். "மீண்டு வராது" என்று அழுத்தமாகச் சொன்னது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்ராஜ் அட்டாக்..!!