தவெகவின் பூத் கமிட்டி மாநாடு... விஜயின் சொந்த ஊர் செண்டிமெண்ட்... பக்கா அரசியல் மூவ்..!
பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் யாருக்கும் இந்த பூத்கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தவெக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாட்டை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாநாட்டை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், டெல்டா மண்டலம் என ஐந்து மண்டலங்களில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதலாவதாக மேற்கு மண்டலமாக இருக்கக்கூடிய கோயம்புத்தூரில் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்னர் ஐந்து மண்டலங்களாக நடக்கக்கூடிய இந்த பூத் கமிட்டி மாநாட்டில் ஐந்து இடங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். முக்கிய ஆலோசர்கள், பூத்த கமிட்டி நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 2026ல் அம்பேல்... தவிடு பொடியான விஜய்யின் அரசியல் கணக்கு... தவிக்கும் தவெக
பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் யாருக்கும் இந்த பூத்கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தவெக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது இறுதிப் படமான ஜனநாயகன் படத்தை முடித்துவிட்டு தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்று நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் ஏற்கனவே அறிவித்தபடி பூத் கமிட்டி மாநாடு தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: இனி உங்க நாடகம் எடுபடாது; தக்க பதிலடி கொடுப்போம்... திமுகவை சாடிய விஜய்!!