×
 

அப்பாவே பரவாயில்ல... மகனின் அட்ராசிட்டி..! உதயநிதி ஸ்டாலினை வெளுத்துவிட்ட தவெக.!

திமுகவை தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்து உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுகவின் தற்போதைய தலைமையைக் கடுமையாக சாடியுள்ளது. அண்ணா ஆரம்பித்த பொன்னான திமுகவை இன்றைய தந்தையும் மகனும் சேர்ந்து புண்ணாக்கி சின்னாபின்னமாக்கி வருகின்றனர் என்றும் அவர்கள் தாறுமாறாக மனம் தடுமாறி இருக்கின்றனர் என்றும் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலை அவர்களைப் பின்னோக்கிச் செல்ல வைத்துள்ளது என்றும் உண்மையைப் பேசத் தொடங்கியுள்ளனர் என்றும் தமிழக வெற்றிக் கழகம் கூறியுள்ளது.

மின்வெட்டையும் அரிவாள் வெட்டையும் ரைமிங்காகவும் டைமிங்காகவும் பேசுவதாக நினைத்துக்கொண்டு 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடே மின்வெட்டில் மூழ்கிய அந்த இருண்ட நாட்களை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்திப் பெருமிதம் கொள்கின்றனர் என்று கழகம் விமர்சித்துள்ளது. அந்தக் காலத்தில் மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் வாடினார்கள். தொழிற்சாலைகள் செயலிழந்தன. மாணவர்கள் படிப்பு பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள்.

இந்த உண்மையை இப்போது அவர்களே நினைவுபடுத்தி மக்களை மீண்டும் அந்த வேதனையை உணர வைக்கிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமல்ல. அரிவாள் வெட்டைப் பற்றியும் அவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். திமுகவின் மூத்த முன்னோடியாகவும் தமிழக அமைச்சராகவும் திகழ்ந்த திரு. தா. கிருட்டிணன் அவர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை இன்றைய Gen Z தலைமுறைக்கும் தெரியப்படுத்தி திமுகவின் வன்முறை வெறியாட்டத்தைப் புரிய வைக்கின்றனர் என்று கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சம்பவம் திமுகவின் வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாக இருந்து வருகிறது. அமைச்சர் பதவியில் இருந்த ஒரு மூத்த தலைவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டதை இப்போது அவர்களே நினைவுபடுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் கூறியுள்ளது. ஒரே கொடுமை என்னவெனில் தந்தையாவது கட்சி மேடையில் இத்தகைய கதைகளைச் சொல்லினார்.

இதையும் படிங்க: அச்சரப்பாக்கத்தில் CM விஜய் சூறாவளி பிரச்சாரம்..! வந்தாச்சு இடைத் தேர்தல்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

ஆனால் மகனோ மங்கல நிகழ்ச்சியான திருமண விழாவிலேயே தங்கள் ஆட்சியின் பழைய வரலாற்றைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைக்கிறார். மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் கூட கடந்த காலத்தின் வன்முறை மற்றும் தோல்விகளை நினைவுபடுத்தி மக்களின் மனதை புண்படுத்துகிறார் என்று கழகம் கிண்டல் செய்துள்ளது. திருமண விழா என்பது மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் உரிய இடம். அங்கே அரசியல் வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் பேசுவது என்பது மிகவும் பொருத்தமற்ற செயல் என்று தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்டுள்ளது.  

இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share