×
 

நான்லாம் பாத்ததுமே எஸ்கேப்! கொடிக்கம்பம் விழுந்ததை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி…

கொடிக்கம்பம் சரி அதைப் பார்த்தவுடன் அந்த இடத்தில் இருந்து பதறி அடித்து ஓடி விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விக்கிரவாண்டி மாநாட்டில் நடந்த எந்த ஒரு பிரச்சனையும் இந்த மாநாட்டில் நடக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தினர் செய்து வந்தனர். இருப்பினும் கொடி கம்பம் விழுந்த சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்புகின்றன. 

100 அடி கொடி கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் பாரதத்தில் நடப்பட்ட 100 அடி கொடி கம்பம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது.

இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது கொடிக்கம்பம் விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. கவனக்குறைவு தான் இதற்கு காரணம் என கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: விஜய் மாநாட்டின் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து… அப்பளம் போல் நொறுங்கிய கார்!

ஒரே பெல்ட்டில் போட்டதால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் எக்ஸ்ட்ரா பெல்ட் போட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததை பார்த்ததுமே அங்கிருந்து ஓடி விட்டதாக அவர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: 'வாகைசூடும் வரலாறு திரும்புகிறது'.. தெறிக்கவிடும் தவெக மாநாட்டின் கட்அவுட்.. இனி ஆட்டம் வெறித்தனம்தான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share