வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்..! சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி..! தவெக அரசுக்கு திருமா. நன்றி..!!
வெற்றி பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் இடம்பெற்று இருப்பது குறித்து திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு வெற்றிப்பயணத் திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது சிறுத்தைகளின் சமூகநீதிக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு வெற்றிப்பயணத் திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவையை பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு பேருந்துகள், குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவைகள் மற்றும் சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டித்துள்ளது. இதனை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தது பாராட்டுக்குரியது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படும் சமூகமான மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று திருமாவளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலையில் குற்றப்பத்திரிகை ரத்து..! தவறான முன் உதாரணம்... திருமா. எதிர்ப்பு..!!