அறிக்கை தாக்கல் கூடவா தெரியாது.? டம்மிகளின் டாடியா.? வீரமணி விஷயத்தில் தவெக தாக்கு..!!
வீரமணி வழக்கை குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்து உள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான எண்பத்து நான்கு வயது வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025 அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவில் ஒரு பென்டிரைவைக் கொடுத்து புகார் அளித்தார். அதில் வயதான ஒருவர் சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்தன.
அடுத்த நாளே அக்டோபர் 7 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் அந்த நபர் வீரமணி என அடையாளம் காணப்பட்டாலும், அப்போதைய திமுக ஆட்சியில் உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை தீவிரமடைந்தது. 2026 ஆகஸ்ட் இறுதியில் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள சம்பவத்தை சுட்டிக்காட்டி தவெக விமர்சித்து உள்ளது. வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா? என கேட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா? வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்? வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்? என சரமாரி கேள்விகளை முன் வைத்து உள்ளது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் புது வெடிகுண்டு..! ரூ.20 கோடி கேட்டு மிரட்ட சொன்னாங்க... ஜான் பாண்டியன் பகீர் விளக்கம்!