விரைவில் புதிய எரிசக்திக் கொள்கை... அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த அப்டேட்.!
விரைவில் புதிய எரிசக்திக் கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார். மாநிலத்தின் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும், அது முதலீட்டாளர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கொள்கை தமிழகத்தை நாட்டின் முன்னணி பசுமை ஆற்றல் மையமாக மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் என்பது அவரது கருத்து.சூரிய மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பகல் நேரத்தில் உருவாகும் உபரி மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உபரி மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகமாகும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தும் வகையில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் மின்சாரத் தொகுப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து, நிலையான மின் விநியோகத்தை உறுதிசெய்ய முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்ட மாநிலம் என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். மாநிலத்தில் ஏற்கனவே உள்ள காற்றாலைத் திறன் பெருமளவில் இருப்பதால், புதிய முதலீடுகளுக்கு இது சிறந்த தளமாக அமைகிறது.
இதையும் படிங்க: கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!
குறிப்பாக, இருபது ஆண்டுகளுக்கு மேல் பழமையான காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பழைய இயந்திரங்களை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றி, அதிக மின் உற்பத்தியைப் பெறும் வகையில் மறுமேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மூன்று ஆண்டுகளில் ஏழாயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தியை மறுமேம்படுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழைய வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, புதிய முதலீடுகளையும் ஈர்க்க முடியும் என அமைச்சர் விளக்கினார்.
இதையும் படிங்க: "கேடுகெட்டத்தனம்"..! நாவை அடக்கணும்..! அமைச்சர் நிர்மல் குமாரை சாடிய அதிமுக..!