×
 
☰

CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அமைச்சர்களும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்கு ஆவணத்தின் கீழ் 436 திட்டங்களுக்கும் இலக்குகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரண்டாவது கூட்டத்தில் மாநில நிதிநிலை அறிக்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. இப்போது நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தத் திட்டங்களின் செயல்பாடு, முன்னேற்றம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் துறைவாரியான இலக்குகள் எந்த அளவுக்கு அடையப்பட்டுள்ளன என்பதையும் அமைச்சர்கள் விவாதிக்கின்றனர்.தொழில் மற்றும் முதலீட்டுத் துறை முக்கிய இடம் பெற்றுள்ளது. மாநிலத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும் ஏற்கனவே உள்ளவற்றை விரிவாக்கம் செய்வதற்கும் தொடர்பான பல முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: "மூலை முடுக்கெல்லாம் ஊரை அடித்து உலையில் போட்ட சொத்துகள்".! அன்புடன் எச்சரிக்கை.!! தவெக விமர்சனம்.!!

இதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கம் உள்ளது. குறிப்பாக பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் தொடர்பான திட்டங்கள் மற்றும் குறைக்கடத்தி சூழலமைப்பு திட்டத்திற்கான ஊக்கத்தொகைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இவை மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் குறித்தும் விவாதம் நடைபெறுகிறது. 

 

இதையும் படிங்க: கலையரசன் கைது..! தவெகவின் பாசிச செயல்.! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share