×
 

சீட் இல்லைங்க!! ரசிகர் மன்ற நிர்வாகிகளை கழட்டி விட முடிவு!! விஜயின் செயலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலராக இருக்கும் பலருக்கு, இந்த தேர்தலில் 'சீட்' இல்லை என கூறப்படுவதால், அவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) பெரும் அதிருப்தி அலை! கட்சியின் மாவட்டச் செயலர்கள் பலருக்கு இந்த 2026 சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நீண்டகால ரசிகர் மன்ற நிர்வாகிகளும் மாவட்டச் செயலர்களும் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். கட்சியின் உள் விவகாரங்கள் இப்போது வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

த.வெ.க.வில் மொத்தம் 132 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். 25 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்க்காக போஸ்டர் ஒட்டி, அடி வாங்கி, ரசிகர் மன்றத்தை வளர்த்தவர்கள் இவர்கள். "விஜய் பெரிய நடிகராக வருவார், கட்சி தொடங்குவார் என்பதற்காக நாங்கள் பின்னால் வரவில்லை. ஆனால் இன்று நேற்று வந்தவர்களுக்கு சீட் கொடுக்க, எங்களை புறக்கணிக்கிறார்கள்" என மாவட்டச் செயலர்கள் கசப்புடன் கூறுகின்றனர்.

சென்னையில் 16 தொகுதிகள் உள்ளன. ஆனால் ரசிகர் மன்ற பழைய நிர்வாகிகளுக்கு வெறும் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. விஜய் போட்டியிட உள்ள வில்லிவாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய உள்ளார். மீதமுள்ளவை புதியவர்களுக்கே செல்கின்றன. லயோலா மணி, பெலிக்ஸ் போன்றவர்களுக்கு வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கூட்டணி தாவ முடியாது?! காங்கிரசுக்கு செக் வைத்த திமுக!! பாஜக கொடுத்த டீல்!! தவெக அடுத்த மூவ்!

அம்பத்தூரில் ஜே.சி.டி. பிரபாகருக்காக மாவட்டச் செயலர் பாலமுருகன் புறக்கணிக்கப்படுகிறார். செங்கோட்டையன் தன் ஆதரவாளர்கள் 8 பேருக்கு சீட் கேட்கிறார். இதனால் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 3 மாவட்டச் செயலர்களுடன் 5 பழைய நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்காது. திருச்செங்கோடில் அருண்ராஜ், பெரம்பலூரில் ராஜ்மோகன் போன்ற புதியவர்களுக்காக பழையவர்களின் கனவு காவு விடப்படுகிறது.

கடந்த 10-ம் தேதி நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், த.வெ.க. பொதுச்செயலர் ஆனந்த், "மாவட்டச் செயலர்கள் சீட் எதிர்பார்க்க வேண்டாம்; தளபதிக்காக உழையுங்கள்" என பெயர் குறிப்பிட்டு வெளிப்படையாக கூறியுள்ளார். 

இது விஜயின் உத்தரவின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் அதிருப்தியாளர்கள். "நாங்கள் சீட் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், கட்சி மாறி வந்தவர்களுக்காக எங்களை வெளியே தள்ளுவது வேதனை அளிக்கிறது" என அவர்கள் கூறுகின்றனர்.

த.வெ.க.வின் முதல் தேர்தலே இப்படி உள் பிளவுடன் தொடங்கியுள்ளது. விஜய் தலைமையிலான கட்சியின் எதிர்காலத்தை இது பாதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பழைய ரசிகர்களின் அதிருப்தி கட்சியின் வெற்றிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க: தாக்குப்பிடிப்பாரா விஜய்? 3 மாசமா ஒண்ணுமே நடக்கல?! விரக்தியில் வெடித்த தவெக நிர்வாகிகள்! பனையூரில் பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share