×
 

விஜய்க்கு தீராத தலைவலி!! தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்!! எச்சரித்தும் அடங்காத நிர்வாகிகள்!

த.வெ.க.,விற்குள் விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கும், நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உள் மோதல் தீவிரமடைந்து வருகிறது. விஜயின் நெருங்கிய வியூக வகுப்பாளரும் பொதுச்செயலாளருமான ஜான் ஆரோக்கியசாமிக்கும், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இது கட்சியின் தேர்தல் தயாரிப்புகளை பாதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெக தொடங்கும் முன்பே விஜயுடன் பயணித்த ஜான் ஆரோக்கியசாமி, பொதுச்செயலாளர் ஆனந்துக்கு அடுத்த இடத்தில் தனிப்பட்ட வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு ஆனந்த் குறித்து ஜான் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து கட்சிக்குள் உட்கட்சி பிரச்சனை வெடித்தது. கரூர் விவகாரத்தில் ஆனந்த் தலைமறைவாக இருந்ததால் கட்சி மொத்தமும் முடங்கியது. 
கட்சியின் மொத்த கட்டுப்பாடும் ஆனந்திடம் இருப்பதால் தான் இப்படி முடங்கியது என்று ஜான் விஜயிடம் கூறியதாக தகவல்கள் உள்ளன. இது ஆனந்துக்கு தெரிய வந்ததும் இருவருக்கும் இடையே மோதல் தொடங்கியது. அதனால் ஆனந்தை மீறி ஜான் நிர்வாகிகளிடம் பேச முடியாமல் தவித்து வருகிறார்.

இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆதவும் வியூக வகுப்பு நிறுவனம் நடத்துபவர் என்பதால், வியூக வகுப்பு பிரிவில் ஜானுக்கு அடுத்த இடம் அவருக்குக் கிடைத்தது. இதனால் தொடக்கத்திலிருந்தே இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: நீங்களே இப்படி பண்ணலாமா? உட்கட்சி பூசலால் உடைகிறது தவெக?! புலம்பி தவிக்கும் விஜய்!

இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்க்கும் வகையில், வியூக வகுப்பு மற்றும் கூட்டணி பணிகளை ஜான் கவனிக்க வேண்டும், பூத் கமிட்டி பணிகளை ஆதவ் கவனிக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டார். ஆனால் இந்த பிரிவினையும் மோதலை நிறுத்தவில்லை.

கடந்த 21-ம் தேதி அமமுக தினகரன், தேமுதிக கூட்டணியில் இணைவதாக வெளியான செய்திக்கு, ஆதவ் அர்ஜுனா 'எல்லா ஆடுகளும் வெட்டப்படுவதற்காகவே வாங்கப்படுகின்றன' என்று பேட்டி அளித்தார். அன்றிரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதை கேட்ட ஜான் ஆரோக்கியசாமி கொந்தளித்தார். "தேவையில்லாத பேச்சாலேயே கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்கள் பார்க்கவில்லை" என்று ஆதவிடம் கூறினார்.

அதற்கு ஆதவ், "உங்களால் ஒரு கட்சியைக் கூட கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை. இதுதான் உங்களின் வியூகமா?" என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்து நள்ளிரவு வரை நீடித்தது.

இந்த சம்பவத்தை மனதில் வைத்துதான், மாமல்லபுரத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் "கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்" என்று விஜய் எச்சரித்து பேசினார். ஆனால் அதன் பின்னரும் ஜான் - ஆதவ் இடையேயான மோதல் தொடர்கிறது. இதனால் கட்சியின் தேர்தல் தயாரிப்புகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுகின்றன என்று தவெக வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தவெகவில் உள் ஒற்றுமை ஏற்படுமா? அல்லது இந்த மோதல் கட்சியை பலவீனப்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: படர் தாமரை உடலுக்கு நாசம்! பாஜக தாமரை நாட்டுக்கே நாசம்! இபிஎஸ் - டிடிவி-யை வச்சு செய்யும் கருணாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share