×
 

தவெகவுக்கு அதிமுக ஆதரவா? மாறும் அரசியல் களம்! எடப்பாடி பழனிசாமியுடன் என்.ஆனந்த் சந்திப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக அரசியல் சூழலில் ஆட்சி அமைப்பைச் சுற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (Edappadi K. Palaniswami) நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கையை எட்ட இன்னும் 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது. இதனால், பல்வேறு கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முன்னதாக, திராவிட முன்னேற்ற கழகம் (Dravida Munnetra Kazhagam) கூட்டணியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress), இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (Viduthalai Chiruthaigal Katchi) உள்ளிட்டவர்களிடம் ஆதரவு கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாணியை பின்பற்றும் விஜய்!! திருச்செந்தூர் வழிபாடு முதல் பதவியேற்பு வரை!!

ஆனால், அரசியல் கணக்குகள் திடீரென மாறும் சூழலில், அதிமுகவின் ஆதரவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதற்காக, தவெக நிர்வாகிகள் மூலம் அதிமுக தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆதரவு கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் (C. V. Shanmugam) மற்றும் எஸ்.பி. வேலுமணி (S. P. Velumani) ஆகியோர், எடப்பாடி பழனிசாமியை ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், இன்று காலை முதலே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு அதிகரித்தது. இதன் தாக்கமாக, காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கூட பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், முக்கிய திருப்பமாக, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் நேரடியாக எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு, ஆட்சி அமைப்பைச் சுற்றிய அரசியல் சமன்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.

அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும் முடிவுகள், தமிழக அரசியல் திசையை முழுமையாக மாற்றக்கூடியதாக இருக்கும் என்பதால், இந்த சந்திப்புக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: தவெக விஜய் வீட்டிற்கு வந்த பிரபல ஜோதிடர்!! பதவியேற்புக்கு நல்ல நேரம் குறிப்பது குறித்து ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share