×
 

“விஜயை பார்க்க இவர்கள் எல்லாம் வரக்கூடாது” - ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட செங்கோட்டையன்...!

கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் பதினெட்டாம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசினார். 

தவெக சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில், விஜய் 18.ம் தேதி காலை 11 முதல் 1 மணிக்குள் உரையாற்றுகிறார். காவல் துறை விதிமுறைகளுக்கு ஏற்ப கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டுகிறோம்.

அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் நிலையை கருத்தில் கொண்டு இந்த வேண்டுகோளை ஏற்று கூட்டம் நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பை  வழங்க வேண்டும்..
வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும்.. அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து முடித்துள்ளோம்.

இதையும் படிங்க: யாருடன் கூட்டணி..? டைம் இருக்கு., ஆனா இது நடக்கும்… TTV தினகரன் ப்ளீச் பேச்சு…!

குடிநீர் பாதுகாப்பு அரண் கழிவறை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் 40 கேமராக்கள் இதுவரையும் தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இதுவரை தமிழகம் கண்டிராத வகையில் இந்தக் கூட்டம் இருக்கும்.

 தமிழகத்தில் மற்ற கூட்டங்களுக்கு வழிகாட்டியாக இது இருக்கும். பெரியார் பிறந்த மண்ணிற்கு பெருமை இருக்கிறது.. பாண்டிச்சேரிக்கு பிறகு இந்த கூட்டம் ஈரோட்டில் நடக்கிறது. அனைவரும் பாராட்டும் வகையில் இந்த கூட்டம் நடைபெறும்.

இங்குள்ள விளம்பர பலகை மீது, தொண்டர்கள் ஏறாத வகையில் முறுக்கு கம்பிகள் பொறுத்தப்படும்.அந்த இடத்தில் தொண்டர் படை 5 பேர் பாதுகாப்பில் இருப்பர். ஆயிரம் தொண்டர் படையை சேர்ந்தவர்கள் கூட்டத்தில்  பணி அமர்த்தப்படுவர். 500-700 பேர் ஒவ்வொரு கேபினிலும் அனுமதிக்கப்படுவர்.

பாண்டிச்சேரியில் உரிய நேரத்தில் வருகை தந்து உரையாற்றினார். அதைப்போலவே இங்கும் உரிய நேரத்திற்கு விஜய் வருவார். 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தவெக சார்பில் தயார் நிலையில் வைக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: அநியாயம் நடக்குது தளபதி… கட்சியை விட்டே நீக்கிட்டாங்க… போராட்டத்தில் குதித்த தவெக தொண்டர்கள்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share