×
 

தவெக + காங்., கூட்டணி! வாழ்த்தி வரவேற்போம்!! செங்கோட்டையன் சூசக பதில்!

பெரிய தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் பொங்கலுக்குள் இணைவார்கள் என தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

கோபி (ஈரோடு): தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் 296ஆவது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் வேலுநாச்சியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவின் கொள்கைத் தலைவராக நடிகர் விஜயை ஏற்றுள்ளதாகவும், ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி பெற்ற வேலுநாச்சியாரை போல விஜயும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

செங்கோட்டையன் பேசுகையில், “தமிழகத்தில் 10க்கு 8 பேர் விஜயை ஆதரிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில் தலைசிறந்தவராக திகழும் விஜய், 2026 தேர்தலில் மக்களாட்சி மலர்க்கும் நல்லாட்சியை அமைப்பார். 

இதையும் படிங்க: எங்ககூட வருவது தான் விஜய்க்கு பாதுகாப்பு! அழைப்பா? மிரட்டலா? ட்விஸ்ட் வைக்கும் தமிழிசை!

மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் பணியாற்றி வருகிறோம். வெற்றி என்ற இலக்கை மக்கள் உருவாக்கும் காலம் தொடங்கிவிட்டது. 2026 தேர்தல் தமிழகத்தில் புதிய வரலாறு படைக்கும் நாளாக அமையும்” என்றார்.

விஜய் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராகவும், புதிய வரலாறு படைக்கும் தலைவராகவும் எதிர்காலத்தில் திகழ்வார் என்று செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். கட்சியில் விருப்ப மனு பெறும் முறை குறித்து தலைவர் விஜய்தான் முடிவு செய்வார் என்றும் கூறினார். திமுக அளித்த ஓய்வூதிய திட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் போராட்டங்கள் வலுவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பெரிய தலைவர்கள் பொங்கலுக்கு முன் தவெகவில் இணைவார்கள் என்றும், கூட்டணி அமைப்பதில் விஜயை முதல்வராக ஏற்கும் கட்சிகளே இணையும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் தவெகவை தாக்குவது கட்சியின் வளர்ச்சியை உணர்த்துவதாகவும், காய்க்கும் மரத்தில் கல் எறிவது போல இது நடப்பதாகவும் கூறினார்.

காங்கிரஸுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, “தமிழக வெற்றிக் கழக தலைவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி தான் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும். அவ்வாறு இணைப்பவர்களை வாழ்த்தி வரவேற்போம். யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். உண்மையான பேச்சுவார்த்தை தலைவர் விஜயுடன் நடப்பதுதான். பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: விஜய், ஸ்டாலின் கனவு பலிக்காது? யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது! தமிழகத்தில் தொங்கு சட்டசபை? : அமித் ஷா கணிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share