“யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!
மற்றவர் கருத்துக்கள் சொல்லியோ மற்றவர் கருத்துக்களை ஏற்றோ நான் இந்த இயக்கத்தில் இணையவில்லை என உதயநிதிக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் டெல்லி தலைமை சொல்லி தான் நீங்க தவெகவில் இணைந்ததாக சொல்லிருக்கிறார் என்ற கேள்விக்கு, ஒவ்வொருடைய கருத்துக்களும் பதில் சொல்ல இயலாது. என்னை பொறுத்தவரையிலும் தெளிவாக ஒரு முடிவு செய்துதான் நான் இந்த இயக்கத்திலே இணைந்திருக்கிறேன். மற்றவர் கருத்துக்கள் சொல்லியோ மற்றவர் கருத்துக்களை ஏற்றோ நான் இந்த இயக்கத்தில் இணையவில்லை என்றார்.
தூய்மை ஆட்சி அமையும் வேண்டும் என கூறுகிறீர்கள். அதிமுகவில் நான் முதலமைச்சராக இருந்த போது செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார் அப்போது தூய்மையான ஆட்சி அமையவில்லையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தூய்மையான ஆட்சி என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆண்ட காலத்தில் தூய்மையான ஆட்சியாக இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் நாம் அதை பின்பற்றினோம் அதனால் தான் எம்.ஜி.ஆரை மூன்று முறையும், ஜெயலலிதாவை 5 முறையும் யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இப்போது மக்களுடைய தீர்ப்பை பொறுத்தவரையில் 2021 என்ன தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே எடப்பாடி பழனிசாமிக்கான பதில் எனக்கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் பின்னணியில் பாஜக... அதிமுகவிற்கு வார்னிங் கொடுத்த திருமா...!
நீங்க காலக்கெடு விதித்ததாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, தான் யாருக்கும் காலக்கெடு விதிக்கவில்லை, அனைவரையும் ஒன்றிணைக்க பேச்சுவாத்தைதான் நடத்தினேன். ஐந்து நாட்களுக்குள் பேச்சு வார்த்தை துவங்க வேண்டும் ஒரு மாதம் அல்லது ஒன்ற மாதம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பிறகு யாரை சேர்த்தலாம் சேர்த்த வேண்டும் என்பது பொதுசெயலர்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்தேன் என்றார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசைப் பாராட்டி விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்று செங்கோட்டையன் அதைப் புறக்கணித்தார். இன்று யார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தவெக-வில் இணைந்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த நிகழ்ச்சி அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைத்து நடத்திய நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் நான் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் பேனரில் இடம் பெறாதது குறித்து கருத்து தெரிவிக்க காரணம், நாங்கள் எல்லாரும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். அதனால் தான் அந்த கருத்தை தெரிவித்தேன்.
கடந்த 8 வருடமாக செங்கோட்டையன் கட்சிக்கு விசுவாசமாக இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியது குறித்த கேள்விக்கு, அது அவருடைய கருத்து, என்னைப் பொறுத்தவரையில் அதுபோன்று இருந்தது கிடையாது எனக்கூறினார். டிடிவி தினகரனுடன் தொடர்ந்து பேசி வந்ததாகவும், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும் இபிஎஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த செங்கோட்டையன், 5-ம் தேதிக்கு முன்பு வரை ஓபிஎஸ் டிடிவி தினகரனிடம் நான் பேசவில்லை. ஈபிஎஸ் பொய் சொல்கிறார். தன்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான் ஈபிஎஸ்சின் ஆசை. அதை ஏதோ ஒரு காரணம் கூறி செய்துவிட்டார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி என்னை வெளியே அனுப்பினார்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கோபிசெட்டிபாளையத்தில் இபிஎஸ்க்கு கூடியது கூட்டப்பட்ட கூட்டம். ஈபிஎஸ் கூட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். 2021ல் மக்கள் வழங்கிய தீர்ப்பே எடப்பாடி பழனிசாமிக்கான பதிலாக இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: விஜயை முதலமைச்சராக்க உயிர் மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன்… செங்கோட்டையன் திட்டவட்டம்..!