×
 

"ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்..." - சாட்டையைச் சுழற்ற தயாராகும் விஜய்... தவெ மா.செ.க்களுக்கு ஆப்பு...!

புகார் தெரிவிக்க நிர்வாகிகளுக்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சந்தித்த கையோடு தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீண்டும் முழு வீச்சில் அரசியல் களத்திற்கு திரும்பி உள்ளார். திமுகவை வெளுத்து வாங்கும் விதமாக அறிக்கைகளை வெளியிடுவது, தேர்தலுக்கான சின்னத்தை இறுதி செய்வது, கட்சி நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு நிர்வாக குழுவை ஏற்படுத்தியது என முழு வீச்சு எங்கு வருகிறார். 

கரூர் சம்பவத்திற்கு பிறகு இனியும் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்தால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்டு, திமுக அதிமுக பணியில் வார் ரூம் அமைத்து களமிறங்கியுள்ளார். 

80 பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வார் ரூம் மூலம் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய கட்சிப் பணிகளை விஜய் நேரடியாக கண்காணிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. 

இதையும் படிங்க: முடியவே முடியாது... விஜய்க்கு 'நோ' சொன்ன காவல் துறை... மீண்டும் பனையூருக்குள் வைத்து முடக்க திட்டமா?

குறிப்பாக சட்டமன்ற தேர்தலை நோக்கி பூத் கமிட்டி அளவில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பணிகளையும் மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மேற்கொள்ளக்கூடிய பணிகளை விஜய் நேரடியாக இந்த வார் ரூம் மூலம் கண்காணிப்பார் என்று சொல்லப்பட்டது.

தற்போது அடுத்த அதிரடியாக தவெக மாவட்ட செயலாளர் தவறு செய்தால் சரியாக கட்சி பணிகளை தவறு செய்தால் சரியாக கட்சி பணிகளை செய்யாவிட்டால், புகார் தெரிவிக்க நிர்வாகிகளுக்கு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புகார்கள் விஜய்க்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு உதவி எண் மூலமாக பிற கட்சியினருடன் தவெகவினருக்கு ஏற்படக்கூடிய மோதல் குறித்து விஜய்க்கு நேரடியாக புகார் தெரிவிக்க முடியும் என ஆலோசனைக் கூட்டத்தில் வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டு வந்த தவெக... மீண்டும் மக்கள் சந்திப்பு... சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க விஜய் திட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share