"அண்ணா வாண்ணா"... நாளை ஒன்றல்ல, இரண்டு சம்பவம் தயார்... களத்திற்கு வருவாரா விஜய்?
தருமபுரியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய, 13 நிபந்தனைகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி.
வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 2024 பிப்ரவரியில் கட்சியைத் தொடங்கிய விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவுடன், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிப்ரவரியில் தேர்தல் அறிக்கை உருவாக்கும் பணிகள் வேகம் பெற்றன. மார்ச் இறுதியில், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். தற்போது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜய் அனல் பறக்க பிரசாரம் மேற்கொள்வார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தால், 2 நாட்கள் பரப்புரை செய்தால் ஒரு நாள் ரெஸ்ட் என்ற கணக்கில் பிரசாரம் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல்..!! திருப்பூரில் விஜய் பரப்புரைக்கு நாளை அனுமதி..!
இதனால் தவெக தொண்டர்கள் கடும் அப்செட்டில் உள்ள நிலையில், நாளை திருப்பூரிலும், தருமபுரியில் பரப்புரை மேற்கொள்ள நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தவெக தலைவர் விஜய் நாளை 14ஆம் தேதி பரப்புரை செய்கிறார். இதற்காக தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் இடத்தில் தவெகவினர் அனுமதி கோரியிருந்தனர்.
இந்த நிலையில் தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.காயத்ரி, தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்வதற்கு 13 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளார். இதில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் வைக்கப்படும் பேனர், ஒலிபெருக்கிகள், கட்சி கொடிகள், தடுப்புகள் உள்ளிட்டவை தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், பாதுகாப்பிற்காக உரிய கட்டணத்தை செலுத்தி தீயணைப்பு ஊர்தியை அழைத்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல் அதிகளவில் மின் கம்பிகள் இருப்பதால் ட்ரோன்கள் பறக்க விடும்போது கவனமாக பறக்க விட வேண்டும். அனுமதி வழங்கப்பட்ட இடம், குறித்த நேரத்தில் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும். சாதி, மத பிரச்சினைகள் ஏற்படும் வகையில் இருக்கக்கூடாது. எஸ் எம் எஸ் மூலமாக தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 13 வகையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெக தரப்பில் பகல் 12 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை அனுமதி கோரப்பட்டு இருந்த நிலையில், காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பரப்புரையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பாரா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இதையும் படிங்க: டெக்னாலஜிதான்..! Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பரப்புரை..!!