×
 

#BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

ஆளுநர் அர்லேகரைச் சந்தித்த விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்கினார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றி இருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை பெறாமல் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தெரிவித்திருந்தார். ஏற்கனவே விஜய்க்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்த நிலையில், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரி தூது அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தன. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது. 

பெரும்பான்மையை நிரூபிக்க 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், எதிர்பாராத வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்தன. இதனால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. இதனையடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரும்பான்மை ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை நேரில் சந்திக்க புறப்பட்டிருந்தார். ஆனால், அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாததால், அவர் மீண்டும் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார். இன்று இரவு சுமார் 7.10 மணியளவில் ஆளுநர் கேரளா செல்ல விமானப் பயணம் மேற்கொள்ள இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் மாலை 6.30 மணிக்குள் அவர் விமான நிலையத்திற்குப் புறப்பட வேண்டியிருந்ததால், விஜயை நேரில் சந்திக்க இயலாத சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, ஆளுநர் தரப்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, “நாளை உங்களுக்கு வசதியான நேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு வந்து பெரும்பான்மை ஆதரவு கடிதத்தை வழங்கலாம்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் பதவியேற்பு விழாவை திங்கள் கிழமை காலை நடத்த தவெக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென கேரளா செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்த ஆளுநர் அர்லேகர், உடனடியாக விஜயை ஆளுநர் மாளிகைக்கு வரச் சொல்லி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: “நான் ரெடி தான் வரவா”... 4வது முறையாக ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்... பதவியேற்பு எப்போது?

இதனையடுத்து பட்டினம்பாக்கம் இல்லத்தில் இருந்து அவசர அவசரமாக மீண்டும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விஜய் வந்து சேர்ந்தார். தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சந்தித்த விஜய், 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அவரிடம் வழங்கினார். அப்போது பதவியேற்பு விழா தொடர்பாக ஆளுநரிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, நாளை மாலை 3 மணிக்கு பதவியேற்பு விழாவை நடத்த ஆளுநரிடம் விஜய் அனுமதி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share