×
 

“சி.எம். சார் மனசை தொட்டு சொல்லுங்க”... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - வெளுத்து வாங்கிய விஜய்...! 

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி விஜய் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அந்த வகையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் வழியாக வந்த விஜய், திருச்சியில் இருந்து நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார். 2.30 மணி நேரம் தாமதமாக நாகையில் உள்ள அண்ணா சிலை பகுதிக்கு வந்தடைந்தார். 

எல்லாருக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாப்பீட்டிங்களா? என  தொண்டர்களை நலம் விசாரித்துவிட்டு உரையைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய். நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதா அருளோடு பேசுகிறேன். எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகைப்பட்டினம். நாகையில் அடிப்படை வசதிகள் கொண்ட வீடு கிடையாது. அதிகமாக குடிசைகள் கொண்ட ஊர் நமது நாகை தான். இந்த முன்னேற்றத்திற்கு எல்லாம் நமது ஆட்சி தான் சாட்சி என அடுக்கு மொழியில் பேசி, பேசி, அதை கேட்டு கேட்டு நமக்கு காதில் ரத்தம் வந்தது தான் மிஞ்சம். 

இவர்கள் எல்லாம் ஆண்டது பத்தாதா?, மக்கள் தவிப்பது போதாதா? என தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும், கேள்விப்பது நம்முடைய கடமை. இதே நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2011-யில் பிப்ரவரி 22ம் தேதி மீனவர்கள் தாக்குதலைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தினோம். இந்த விஜய் களத்திற்கு வருவது புதுசு இல்லை கண்ணா. எப்பவோ வந்தாச்சு. இப்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் வந்தோம். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் அமைப்பின் பெயரில் வந்திருக்கிறோம். அப்போதும், எப்போதும் மக்களுக்காக மக்களோடு நிற்கிறோம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி என்றார். 

இதையும் படிங்க: விஜய் இப்படி செய்வாருன்னு நினைக்கவே இல்ல... அதிருப்தியுடன் திருப்பிச் சென்ற தொண்டர்கள்...!

தொடர்ந்து நாகையில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினார். இங்குள்ள மண் வளத்தை பாதிக்கக்கூடிய இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அப்போது தான் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும். ஆனால் திமுகவிற்கு சொந்த குடும்பத்துடைய வளர்ச்சி தான் முக்கியமாக உள்ளது. இங்குள்ள மக்கள் தாகத்தால் தவிர்க்கிறார்கள், அதற்காக காவிரியை இங்கு கொண்டு வரலாம் இல்லையா?. மீன்வளம் நிறைந்த இந்த ஊரில் அரசு கடற்படை சார்ந்த கல்லூரியைக் கொண்டு வரலாம். கொண்டு வந்தாங்களா?, மீன் சம்பந்தமான தொழிற்சாலைகளை அமைக்கலாம்? அமைத்தார்களா?. நிறைய பேருக்கு தொழில் வாய்ப்பை அதிகரித்திருக்கலாம், அதற்கு நடவடிக்கை எடுத்தார்களா? என வரிசையாக கேள்வி எழுப்பினார். 

ஆனால் ஒவ்வொருமுறை வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு நாடு திரும்பும் போதெல்லாம், அத்தனைக் கோடி முதலீடு, இத்தனைக் கோடி முதலீடு என சி.எம்.  சிரித்துக்கொண்டோ சொல்வார். சி.எம்.சார் மனச தொட்டு சொல்லுங்க வெளிநாட்டு முதலீடா, வெளிநாட்டில் முதலீடா உங்க குடும்ப முதலீடு வெளிநாட்டிற்கு செல்கிறதா? என கேள்வி எழுப்பினார். 
 

இதையும் படிங்க: சுற்றுப்பயணத்திற்கு சூறாவளியாய் புறப்பட்ட விஜய்... நாகையில் என்ன பேசப்போகிறார் தெரியுமா??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share